Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  என்னைப்பற்றி

Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.


Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அன்னை தெரசா
இணையப் பாட்டி



அன்புக்கு மறு உருவம் பார்க்க வேண்டுமானால் நம் முன் நிற்கிறார் அன்னை தெரசா. ஒரு அன்பு தேவதையாக உலகத்தை வலம் வந்து பின் இந்தியாவில் கல்கத்தா நகரில் தங்கினார் அவர். அன்னை தெரசாவின் பெற்றோர்கள் அவளுக்கு இட்டப் பெயர் "ஆக்னஸ் கோன்ஸா". இதன் பொருள் "மலர் மொட்டு" என்பதாகும். ஆல்பேனியா நாட்டில் அன்னை தெரசா ஆகஸ்டு 26நதேதி 1910ஆம் வருடம் பிறந்தார். அவரைப் பற்றிச் சொல்வதற்கு முன் அவரை ஈன்ற பெற்றோர்களைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். இத்தனை நல்ல அன்பு தேவதையை நமக்கு அளித்த இரத்தினங்கள் அல்லவா அவர்கள்.

இவர் தந்தையின் பெயர் மிஸ்டர் நிக்கோலஸ். தாயின் பெயர் மிஸஸ் ரோஸா. ஆகனஸ்தான் கடைக்குட்டி. மிகவும் செல்லமாக வளர்ந்தார். அவரது அண்ணா லாச்டு ஆக்னஸ்மேல் உயிரையே வைத்திருந்தார். இவர்கள் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர்கள். சிறு வயதிலிருந்தே இறைப்பற்றுடன் இவர் வளர்க்கப்பட்டார். அப்போதிலிருந்தே ஏழை எளியவர்களுக்குச் சேவைச் செய்யும் மனப்பானமை இவரிடம் குடிக்கொண்டிருந்தது.

அவருடைய குடும்பத்தில் ஒரு திடீர் திருப்பம். மிகவும் மகிழ்ச்சியுடன் ஓடிய குடுமபம் திடீரென்று ஸ்தம்பித்து நின்றது. ஆக்னஸின் ஒன்பதாவது வயதில் அவர் தகப்பனார் காலமானார். மூத்த மகன் மிஸ்டர் ஏஜிம் குடும்பத்தைக் காப்பாற்ற ஆரம்பித்தார். ஆகனஸின் தாயார் ஒரு துணிக்கடை வைத்தார். சிறுமி ஆக்னஸும் அவருடன் கூட கடைக்குச் சென்று உழைத்ததர்ர். அங்குதான் அவர் அன்பின் ஓட்டம், பிரார்த்தனையின் வலிமை, வறுமையும் இன்முகத்தோடு ஏற்கும் திறன், ஏழைகளுக்கு உதவுதல் போன்ற பல நற்செயலகளைக் கற்றுக் கொண்டார். ஒழுக்கத்தின் சிகரமாக விளங்கினார்.

பள்ளியில் ஆக்னஸ் மிகவும் வல்லவராகத் திகழந்தார் அங்கு சாலிடாரிடி என்ற குழுவில் சேர்ந்து அங்கத்தினர் ஆனார். சேவை, ஒற்றுமை, தன்நலமில்லா பணி என்ற சில இதன் முக்கிய அம்சங்கள் ஆகும். இவரது 18 வயதில் இவர் "லொரோட்டா" என்ற கன்னி மடத்தில் சேர்ந்தார். இது ஒரு ஐரிஷ் இயக்கம். இந்தியாவில் இந்த இயக்கம் கல்கத்தாவில் இருந்தது. ஆக்னஸுக்கு இந்தியா வர மிகவும் ஆசை. தன் தாயிடம் இதைக்குறித்து மனம் திறந்தார். தாயின் மனம் இதனால் வருந்தியது. அவளைத் தன்னைவிட்டு மிக தூரம் அனுப்ப மனம் ஒப்பவில்லை. ஆனாலும் சேவை செய்வதற்குத்தான் முதல் இடம் என்று அவரை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

1925ல் வங்காளத்தில் பஞ்சமும் நோயும் படையெடுத்தன. மக்கள் பலர் மடிந்தனர். இவர் இதை நிறுத்த மிகப்பாடு பட்டார். மிகவும் உழைத்தார். குள்ளமான உருவம் ஆனாலும் வலிமையான உள்ளம் இருந்தது. எண்ணியதைச் செய்து முடிக்கும் திறமையும் இருந்தது. நினைத்தைச் சாதிக்க வேண்டும் என்ற துணிச்சலும் இருந்தது. அவரது இயக்கத்தின் தலைமை இடமான பாரீஸுக்கு அன்னைத் தேர்வு செய்யப்பட்டார். அங்கிருந்து அயர்லாந்து டூப்ளின் நகரில் பயிற்சியும் எடுத்துக்கொண்டார். ஆங்கிலமும் கற்றார். பிரார்த்தனையின் பலத்தால் மனம் விசாலமாகி கன்னியாகவே வாழ மனத்தில் ஒரு திட சங்கல்பம் உருவானது.

டிசம்பர் 6ம் தேதி 1929ல் திரும்பவும் கலகத்தா மண்ணை மிதித்தார். கிருஸ்துமஸில் குழந்தைகளுக்குப் பரிசு கொடுப்பது போல் நமக்கும் ஜீஸஸ் அன்னை தெரசாவைப் பரிசாக அளித்திருக்கிறார். "வறுமை, கற்பு, அடக்கம் "ஆகிய பண்புகளை முழுமையாக கடைபிடிப்பேன்" என்று உறுதி மொழி கொடுத்து ஆக்னஸ் "சிஸ்டர் தெரசா" ஆனார். அப்போது இந்தியாவில் சுதந்திரப்போர் தொடங்கி வங்காளம் மிகச் சேதமானது. பலர் மடிந்தனர். பட்டினியால் பலர் வாடினர். தவிர இந்தியா பாகிஸ்தான் போர் தொடங்கி பிளவு படுகின்ற நிலை. கலவரம் உச்சநிலை அடைந்தது.

சிஸ்டர் தெரசா பட்டினி கிடக்கும் உயிர்களுக்கு உணவைச் சேகரித்தார். குற்றுயிராகக் கிடக்கும் உடல்களைப் பார்த்துக் கண்கலங்கி முதலுதவி செய்தார். ஓய்வில்லாமல் உழைத்ததில் அவர் உடல் நல்ம் குன்றினார். அவரைக் கட்டாயப்படுத்தி டார்ஜ்லிங் ஓய்வகத்திற்கு தொண்டர்கள் அனுப்பி வைத்தனர். இது தான் திருப்பு முனை. சகோதரி தெரசா அன்னை தெரசா ஆனார். மானுஷ சேவா மஹேசன் சேவா என்றபடி மனிதர்களுக்குத் தொண்டு செய்ததில் அந்த இறைவனே மகிழ்ந்து போனான். கோயிலுக்குப்போய் அல்லது ஜப மாலை உருட்டித்தான் கடவுளைக் காண முடியும் என்று சிலர் நம்புகின்றனர். ஆனால் தன்னலமில்லாத சேவையிலும் உள்ளொளியைக் காண் முடியும் என்பதற்கு சாட்சியாக இருக்கிறார் மதர் தெரசா.

செப்டம்பர் 10 1946ல் அவர் உள்ளொளி கண்டு மகிழ்ந்தார். இதை இன்ஸ்பிரேஷன் டே என்கிறார்கள். மடத்தை விட்டு வீதியிலேயே சேவை செய்ய குருவிடம் அபிப்பிராயம் கேட்டார். குருவோ அவரை ஒரு வருடம் தியானம் செய்து விட்டுப் பின் இதைத் தொடரலாம் என்று சொன்னார். அவரும் அதேபோல் தியானத்தில் ஈடுபட்டார். வெள்ளைச்சேலையில் நீல பார்டர் வைத்த புடவை, முழுக்கைச் சட்டை, இடப்புறத் தோளில் சிலுவை, தலையில் முக்காடு இதுவே அன்னை தெரசாவின் தோற்றம். பின் பாட்னா சென்று வந்தபின் "மிசினிரி ஆப் சாரிடி" என்ற ஒரு நிர்வாகத்தைத் தொடங்கினார். அன்றைய் தினத்திலிருந்து ஒயாமல் உழைப்புத்தான். ஒரு குடிசை கிடைக்க, அதன் முன் ஒரு பள்ளியைத் துவக்கினார். எல்லா மதமும் சமமதமே என்ற கொள்கையில் வாழ்ந்தார். முதலில் அவருக்குக் கிடைத்தவீடு ஒரு கிருஸ்துவர் கோம்ஸ் அளித்த வீடு.

பின் ஹிந்துக்களின் காளி காட், இடம் அதன் பின் வந்தது இஸ்லாமியரின் வீடு. அன்பு ஒன்றே அவர் சாதி. குஷ்ட நோயாளிகள், ஏய்ட்ஸ் நோயளிகள் எல்லோருக்கும் அவரது நிழலில் அடைக்கலம் தரப்பட்டன. பலதரப்பட்ட பரிசுகள் பாராட்டுகள் கிடைத்ன எல்லாம் அவரது சேவைக்கே அர்ப்பித்த தெய்வம் தான் அவர்.

அவருடைய உழைப்பால் சீனா, ரஷ்யா போன்ற பல இடங்களில் அறக் கட்டளை வளர்ந்து வருகிறது. அமெரிக்காவிலும் பல தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் 45க்கும் மேல் இருந்தன. மொத்தத்தில் சுமார் நானூறு சேவை மையங்கள் இருக்கின்றன.

அன்னை தெரசாவில் ஒருபங்கு சேவையாவது நாம் செய்ய முயல வேண்டும். கோயிலில் கடவுள்: நமக்குத் தரிசனம் தருவதை விட பல மடங்கு சேவை செய்தால் நமக்குக் கிடைக்கும்.

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants