மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
ஆகிரா
|
|
![]() தேமதுரத் தமிழிசை உலகமெலாம் பரவுகதமிழிசை உலகமெல்லாம் ஒலிக்கச் செய்யும் பல இன்னிசைக் குயில்களுடன் சேர்ந்து பறந்து பாடித்திரிந்து தமிழ் நெஞ்சங்களை மகிழ்ச்சிக் கடலில் திளைக்க வைக்க இதோ புறப்பட்டுவிட்டது காஞ்சிக்குயில். மழலைப்பருவ முதலே தமிழிசையில் மிகுந்த ஆர்வம் கொண்டு சிறகடித்துப் பறக்கும் சுபாஷிணி எனும் பெயர்கொண்ட இவ்விசைக்குயில் பல மேடைகளைக் கண்டுள்ளது. அத்துடன் இசை உலகின் பல பிரபலங்களுடன் கலந்து பழகி அவர்களது பாராட்டையும் பெற்றுள்ளது.
குழந்தைகளை ஆங்கிலம் மூலம் கல்வி பயிற்றுவிக்கும் பழக்கமுள்ள சமூகத்தில் வாழ்ந்தாலும், தாய்மொழி தெலுங்காக இருந்தாலும், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்கள் மகள் சுபாஷிணியைக் காஞ்சீபுரத்திலுள்ள ஸ்ரீ சோமசுந்தர க்ன்யா வித்யாலயா கல்வி நிறுவனத்தின் தமிழ் வழியில் கல்வி பயிற்றுவிக்கும் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கிறார்கள் இவரது பெற்றோர். தமிழ் மொழியில் பாடங்கள் கற்றுத்தருவது மட்டுமின்றி அத்துடன் தமிழிசையையும் இப்பள்ளியில் கற்றுத்தருகிறார்கள். தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் தமிழ்ப்பாடல்களைக் கேட்டு அவற்றைத் திரும்ப இசை லயத்துடன் இனிமையாகப் பாடுவதைக்கண்டு மகிழ்ந்த அவரது பெற்றோர்கள் சுபாஷிணியை பள்ளியில் கற்றுத்தரும் இசையையும் பயில ஊக்குவித்தனர். இவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்ட சுபாஷிணி பள்ளியிலும், பள்ளியின் சார்பில் வேறு இடடங்களிலும் நடைபெற்ற பல இசைப்போட்டிகளிலும், பல தொண்டு நிறுவனங்கள் நடத்திய குரலிசைப்போட்டிகளிலும் பங்குபெற்றுப் பரிசுகள் பல பெற்றுள்ளார்.
பாட ஆரம்பிக்குமுன் கோவிலின் காப்பாளர் "சக்திபாலகர்" அருள் தணிகா அவர்கள் குழந்தையை, பெரிய பாடகியாக வரவேண்டுமென்று ஆசீர்வதித்தார். ஓலைக்குடிசையில் அமைந்துள்ள அந்த அம்மன் ஆலயத்தில் பாட ஆரம்பிக்கையில் மழை பெய்யத்தொடங்கியது. இருப்பினும் சுபாஷிணி தொடர்ந்து பாட, இசைமழையைக்கேட்க மழையும் உடனே நின்றுவிட்டது. பாடல் பாடி முடிந்தவுடன் கோவிலின் காப்பாளர் அப்பாடலை ஒலிநாடாவாகத் தயார் செய்யவுள்ளதாகவும் அதற்காகவும் சுபாஷிணியே பாடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அதன்படியே பாடல் பின்னர் ஒலிநாடாவாகப் பதிவு செய்யப்பட்டு விட்டது. சிபாஷிணி தன் 11ஆம் வயதில் விஷ்ணு கிரியேஷன்ஸ் சார்பில் திரு சிங்காரவேலன் அவர்கள் தயாரித்த, "திவ்ய தரிசனம்" எனும் பாடல் கொகுப்பைப் பாடினார். பெருமாளைப் பற்றிய ஆறு பாடல்கள் அடங்கிய இத்தொகுப்பு 45 நிமிட நேரம் ஒலிக்கும் வண்ணம் தயாரகியுள்ளது. அனைத்து இசைத்தட்டுக்கள் விற்பனை மையங்களிலும் கிடைக்கிறது.
|
YOUR FEEDBACK FOR THIS ARTCLE ![]() |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |