மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE

Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

உலகம் போற்றும் கலைஞர்கள்

ஆகிரா

 

இணையப் பாட்டி
பழமொழிகள்
குழந்தைகள்
ஓவியங்கள்
சத்துணவு
ஆன்மீகம்
கணினி
Video
Songs
Games
Stories
Puzzles
Proverbs
Feedbacks
Study Tools
Back Issues
Google Maps

ராஜா ரவிவர்மா

Article on Raja Ravivarma, Image: courtesy: Answers.com
உலகப்புகழ் பெற்ற ஓவியர்களுள் ஒருவர் நம் பாரத தேசத்தைச் சேர்ந்த ராஜா ரவிவர்மா. இவரது ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றவை. குறிப்பாகப் புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூறப்படும் பெண்களை மிகத் துல்லியமாக புகைப்படம் போல் வடிப்பதில் இவர் வல்லவர். ஒரு அழகிய பெண்ணை வர்ணிக்கையில் ரவிவர்மாவின் சித்திரம்போல் இருக்கிறாள் என்று பலர் கூறுவதுண்டு.

கேரளாவில் திருவனந்தபுரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள கிளிமனூர் அரண்மனையில் உமாம்பா தம்புராட்டி, நீலகண்டன் பட்டாதிரிபாதி எனும் அரச குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கு மகனாக 1848ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி பிறந்தார் ரவிவர்மா. இளம் வயதுமுதலே ஓவியக்கலையில் திறமையுடன் விளங்கிய ரவிவர்மா திருவாங்கூர் ஆயில்யம் திருநாள் மஹாராஜாவின் ஆதரவைத் தன் 14ஆம் வயதிலேயே பெற்று அரண்மனை ஆஸ்தான ஓவியராயிருந்த ராமஸ்வாமி நாயுடு என்பவரிடம் ஓவியம் கற்றுக்கொண்டார்.

Article on Raja Ravivarma, Image: courtesy: Answers.com
இதன்பின்னர் அவர் தியடோர் ஜென்சன் எனும் ஒரு ஆங்கிலேய ஓவியரிடம் "ஆயில் பைன்டிங்" (oil painting) எனப்படும் எண்ணெய் கலந்த வண்ணக்கலவை கொண்டு ஓவியம் வரையும் கலையைக் கற்றார். ஐரோப்பாவினரின் ஓவியங்களில் காணப்பட்ட சக்தியும், தெளிந்த பாவமும், அவை இந்திய ஓவியக்கலையிலிருந்து மிகவும் மாறுபட்டிருந்த விதமும் ரவிவர்மாவை மிகவும் கவர்ந்தன.

ரவிவர்மா நல்ல படிப்பறிவும், தன் வார்த்தைகளில் கவியோவியம் படைக்கும் புலமையும் மிக்கவர். அவர் எந்த நாட்டுக்கும் அரசரில்லாவிடினும் அவரது இத்தகு திறமைகளினால் ராஜா ரவிவர்மா என்றழைக்கப்பட்டார்.

1873ஆம் ஆண்டு வியன்னாவில் நடந்த ஒரு ஓவியப் போட்டியில் ரவிவர்மா முதல் பரிசுபெற்றதும் அவரது புகழ் எங்கும் பரவியது. ஹிந்து மதத்தினர் வணங்கும் பெண் தெய்வங்களையும் சேலை கட்டிய தென்னிந்தியப் பெண்களையும் அவர் அடிக்கடித் தன் ஓவியங்களுக்கு கருப்பொருளாக எடுத்துக்கொண்டு அவற்றை அழகுடன் ஓவியங்களில் தீட்டினார். மஹாபாரதத்தில் உபகதைகளாகக் கூறப்படும் துஷ்யந்தன் சகுந்தலை, நளன் தமயந்தி கதைகளில் வரும் காட்சிகளை மையமாகக்கொண்டு அவர் வரைந்த ஓவியங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. புராணக் கதாபாத்திரங்களை அவர் வரைந்த விதம் அக்கதாபாத்திரங்கள் இந்தியர்கள் மனதில் ஆழமான இடம்பிடிக்க ஏதுவானது.

Article on Raja Ravivarma, Image: courtesy: Answers.com
ரவிவர்மா இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு பல ஸ்தலங்களைப் பார்வையிட்டு, பின்னர் தான் கண்டவற்றை வண்ண ஓவியங்களாக வடித்தார்.

ஒரு புகழ்பெற்ற ஓவியாரக வெற்றிகரமாகத் தன் வாழ்நாளில் திகழ்ந்த ராஜா ரவிவர்மா 1906ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி தான் பிறந்த ஊரான கிளிமனூரிலேயே தன் 58ஆம் வயதில் இயற்கையெந்தினார்.

அகில உலக அளவில் ஓவியக்கலையில் இந்தியாவுக்கு ஒரு பிரதானமான இடம்பெற்றுத் தந்து அனைவர் மனதிலும் நீங்காத இடம்பெற்ற ரவிவர்மா அவர்களை மனதில் நிறுத்தி அவர்போல் நாமும் தலைசிறந்த ஓவியராக வேண்டும் என விரும்பி முயன்று நம் மழலைகள் அனைவரும் இக்கலையில் சிறந்த இடம்பிடிக்க வேண்டும் என்பது நம் அவா.

ஆகிரா

ரவிவர்மாவைப்பற்றி மேலும் அறிய:

ரவிவர்மாவின் எண்ணெய்க்கலவை வண்ண ஓவியங்கள்

ரவிவர்மாவின் வண்ண ஓவியங்கள்

ரவிவர்மாவின் ஓவியங்கள்

ரவிவர்மாவின் ஓவியங்கள்

ரவிவர்மாவின் வாழ்க்கைக் குறிப்புகள்

ரவிவர்மாவின் வாழ்க்கைக் குறிப்புகளும் ஓவியங்களும்

Submit your articles One Free Software Every Day இணையப் பாட்டி பக்கம் Happy Birthday


Your Feedback for this article
editor@mazhalaigal.com