தாயென்று கும்பிடடி பாப்பா
- கர்மவீரர் காமராஜ்
இணையப் பாட்டி
காமராஜர்
திரு காமராஜரை அவர் தாய் திருமதி சிவகாமி அம்மாள் அன்பாக ராசா என்றே அழைப்பார். தந்தை திரு குமாரசாமி நாடார் ஒரு தேங்காய் வியாபரி. ஆறு வகுப்புத்தான் அவர் படித்திருந்தார், ஆனாலும் மிகவும் புகழ் பெற்ற, திறமை பெற்ற முக்கிய மந்திரியாகத் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கபட்டார் என்றால் அவரது நற்பண்புகள் தான் அதன் காரணம். அவர் பள்ளியில் இருக்கும் போதே தன் தந்தையை இழந்தார், தாய் தன் நகைகளெல்லாம் விற்று ஒரு கடையில் வைத்து அந்த வட்டியில் குடும்பம் நடத்தினார். மிகவும் எளிமையான குடும்பம். அவர் படிப்பில் ஆர்வம் காட்டாததனால் அவரைப் பள்ளியிலிருந்து நீக்கிவிட்டனர். அதிலிருந்து அவர் அர்சியல் ஊர்வலம், மேடைப் பேச்சு சுதந்திரப் போராட்டம் என்று பங்கு கொண்டார்.தன் பதினாறாம் வயதிலேயே காங்கரஸுக்கு முழு நேரம் உழைக்கப் பதிவு செய்துக் கொண்டார். வேதாரண்யம் உப்பு சத்யாகிரஹத்தில் பாகம் எடுத்துக்கொண்டு சிறைக்கும் சென்றார். அவர் அலிப்பூர் சிறையிலும், வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது அவரை முனிசிபல் கவுன்சலாரகத் தேர்ந்தெடுத்தனர், ஆனால் அதை அவர் ராஜிநாமா செய்து விட்டார். உழைக்காமல் ஒரு பதவியில் இருந்து ஊதியம் வாங்குவது நியாயமான செயல் இல்லை என்று சொல்லிவிட்டார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு தான் அவர் தன் படிப்பறிவைப் பெருக்கிக் கொண்டார். நிறைய புத்தகங்கள் படித்தார். தானே படிக்கக் கற்றுக்கொண்டு அதில் மிகச் சிறந்தும் விளங்கினார்.
அவரின் அர்சியல் குரு திரு சத்தியமூர்த்தி அவர்கள், இருவரும் அன்பினால் பிணைந்து திறமையுடன் பல செயலகள் செய்தனர். திரு சத்தியமூர்த்தி காங்கரஸ் தலைவர் ஆனவுடன் திரு காமராஜரைத் தன் காரியதரிசி ஆக்கினார் அவர் திறமையைக் கண்டு மக்கள் அவரைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் முதல் மந்திரியானார் {ஏபரல் 15 1954}. அவர் செய்த அரிய செயல்கள், கல்விக்காக பல பள்ளிக்கூடங்களை கிராமங்களில் அமைத்தார். ஒன்றிலிருந்து பதினொன்று வரை இலவசக் கல்வியும், அதற்கு வேண்டியப் புத்தகங்கள் இலவசமாக வழங்கினார். சீருடையையும் ஆரம்பித்தார். சீருடையினால் சாதி மத பேதம் ஒழியும், தவிர ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இருக்காது என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
ஜமீன்தார்களின் விவசாயி மேல் காட்டும் கொடுமையை ஒழிக்க ஒரு தனிச் சட்டம் கொண்டு வந்து {சீலிங் ஆப் டெனன்சி ப்ரொடெஷன் ஆக்ட்} ஜமீன்தார் பிடிகளிலிருந்து விவசாயிகளுக்கு விடுதலை கொடுத்தார். சாச்சா நேரு அவர் திறமையுடன் தமிழ்நாட்டை ஆட்சி செய்வது குறித்துப் புகழ்ந்தார். வியாபாரம் செழித்தது, பசுமை வளர்ந்தது, தன் கண்ணியம் கட்டுப்பாடு, எளிமை ,திறமை, மதபேதமின்மை, அன்பு என்று பல நற்குணங்களால் எல்லோராலும் புகழப்பட்டார். மூன்று தடவை தொடர்ந்து முக்கிய மந்திரியாகத் திறமையுடன் செயல்பட்டுப் பின் ராஜிநாமா செய்து 1963ல் அகில இந்தியக் காங்கரசின் தலைவரானார்.
1975ல் அக்டோபர் 2ம் தேதி திடீரென்று உடல் நலம் ஒரு மாதிரி ஆக டாக்டரிடம் செல்லப் புறப்பட்டார். தன் பாதுக்காப்பாளரிடம் எல்லா விளக்குகளும் அணைத்து விடு என்று கூறி வண்டியில் ஏறினார், அன்றே காலமானார். அவர் மறைவுக்குப்பிறகு அவருக்கு மிகவும் கௌரவம்வாய்ந்த "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது.
குழந்தைகளே,
தன் நற்பண்புகளாலே, தன் உழைப்பாலே, தன் எளிமையாலே தமிழ்நாட்டின் முக்கிய மந்திரியாக இருந்து சிறப்பாகத் தன் கடமைகளை அவர் முடித்திருக்கிறார் இல்லையா? நற்குணங்கள் இருந்தாலே எல்லாம் கிடைக்கும்.
அக்டோபர் 2 காந்திஜியின் பிற்ந்தநாள் அத்துடன் காந்திவாதத்தைக் கடைப் பிடித்த, மறைந்த திரு கமராஜரின் நினைவு நாளும் வருகிறது அவரை நினைவு கூறுவோம்.
ஆடம்பரம் தவிர்த்தார்,
உழப்பை நாடினார்
சோம்பலை நாடார்,
பிறர் நலம் நாடினார்
தன்நலம் நோக்கார்
அன்பை நாடினார்
வெறுப்பை ஒதுக்கினார்
தமிழ் நாட்டை நாடினார்
தன் வீட்டை மறந்தார்
ஏழ்மையை நேசித்தார்
கருப்புப் பணத்தை நாடார்
நாட்டின் நலத்தை நாடினார்
நம் முதல்வர் காம்ராஜ் நாடார்
அன்புடன் விசாலம்.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














