Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  என்னைப்பற்றி

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.


Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
நவராத்திரி
இணையப் பாட்டி





The nine forms of Durga - image courtesy: Creative commons

குழந்தைகளே,

உங்கள் அம்மா கொலு வைப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் இல்லையா? வரிசையாகப் படிகள் அமைத்து அதன் மேல் அழகான வெண்மை நிறத்தில் துணி விரித்து பின் முதற்படியிலிருந்து பல அழகு பொம்மைகள் வைத்து அலங்கரிப்பாள்,அநேகமாகக் கடவுள் பொம்மைகள் அதிகமாக இருக்கும் தசாவதாரம், சிவன் பார்வதி, நடராஜர், கணபதி கிருஷ்ணர் கோபிகள், தவிர நாட்டின் தலவர்கள் மஹான்கள் என்று பல அதில் இருக்கும். இப்போது உடனடியாக ரெடிமேட் அலுமனியத்தட்டுகள் படிகள் கிடைக்கின்றன, தட்டுகளைப் பொருத்தி பின் நட்டுகளை முடிக்கிவிட்டால் போதும், அப்படியே வலிவுடன் நிற்கும்.

முன்பெல்லாம், அப்பப்பா, அதாவது என் காலத்தில் நாங்கள் கொலுவிற்கு படிக்கட்ட வீடே இரண்டு படும், அரிசி டின் கோதுமை மாவு டப்பாக்கள், மற்ற அண்டா, பிளாஸ்டிக் டப்பா என்று அளவுக்குத் தகுந்தாற்போல் அடுக்கி அதுவும் போறாமல் சரியாகச் சமப்படுத்த பல தடிமனான புத்தகங்களும் வரும் பின் மேலே ஒரு வெண்மையான விரிப்பைப் போட்டு மூடி எப்படியோ ஒரு ஒன்பது படிகள் நிறைவுப் பெற்று விடும்.

இந்த நவராத்திரி புரட்டாசி மாதம் வளர்ப்பிறை பிரதமையிலிருந்து ஆரம்பித்து தசமி வரைச் செல்லும். அம்பாளைச் சிற்ப்பாகப் பூஜை செய்யும் நாட்கள் இவை. முதல் மூன்று நாடகள் துர்கா அல்லது பராசக்தி, பின் வரும் மூன்று நாட்கள் லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் ஸ்ரஸ்வதி என்று ஆவாஹனம் செய்கிறார்கள், பத்தாவது நாள்தான் விஜயதசமி. மகிஷாசுரனைப் பார்வதி ஒன்பது நாட்கள் போர் புரிந்து பின் விஜயதசமி அன்று வதம் செய்கிறாள், வெற்றி பெறுகிறாள். ஸரஸ்வதி பூஜையின் போதுதான் வாத்தியங்கள் புஸ்தகங்கள், போன்ற எல்லாவற்றுக்கும் பூஜை செய்யப்படும். ஆயுத பூசை என்று கார்கள் இயந்திரங்கள், ஆட்டோக்கள் போன்றவைகளுக்கும் பூஜை நடத்தப்படும்.

முன்பு இந்த நவராத்திரியை மிகவும் சிரத்தையாக ஒன்பது நாட்களும் அம்பாளைப் பூசித்து அந்தந்த நாட்களுக்கு ஏற்றவாறு பிரசாதம் {சுண்டல்} தயாரித்து அன்னைக்குப் படைப்பார்கள். கூட்டுக்குடுமபம் இருந்ததால் தடை இல்லாமல் மிகச் சிறப்பாக நடைப் பெற்று வந்தது, ஆனால் தற்போது எல்லா அம்மாக்களும் வேலைக்குப் போவதால் இதை மிக குறைவாக ஆக்கிக் கொண்டு விட்டனர். சிலர் ஏதாவ்து ஒரு வெள்ளிக்கிழமை எல்லோரையும் அழைத்து மஞ்சள் குங்குமம் கொடுக்கின்றனர், சிலர் கடைசி மூன்று நாட்கள் மட்டும் கொண்டாடுகின்றனர். அன்று லலிதா ஸஹஸ்ர நாமம் படிப்பது மிகச் சிறந்தது குழந்தைகள் மாண்வ மாண்விகள் சின்ன ஸ்லோகங்கள் லட்சுமி, ஸரஸ்வதி, துர்க்கை பற்றி படிக்கலாம். இந்தக்கொலுப் படியில் முதலில் கடவுள் பொம்மைகள் பின் மஹான்கள், தலைவர்கள், மிருகங்கள் பறவைகள் என்று வரிசைப் படுத்தி வைக்க வேண்டும்.

Golu - image courtesy: Venkatarangan's blog

கொலு வந்தது என் வீட்டில்
ஐந்து வரிசைகள் கொண்ட தட்டில்
மரப்பாச்சி அப்பா, அம்மா
முதல் படியில் அமர்க்களமாய்
அருகில் வந்தனர் சிவ பார்வதி
அடுத்து நின்றனர் லட்சுமி ஸரஸ்வதி
படிகளை அல்ங்கரித்தனர்
ஆசிகளை வழங்கினர்,
குழலூதும் என் கண்ணன் பொம்மை
அம்மா வாங்கித் தந்த பொம்மை
கொலுப்படியில் அமர்ந்தது
என்னைப் பார்த்து சிரித்தது
சிலம்பேந்திக் கண்ணகி வந்தாள்
பாரதியுடன் ஔவையும் நின்றாள்,
காந்தியும் வந்தார்
நேருவும் வந்தார்,
தேசத்தலைவர்கள் படிகளில் ஏற
பாரதமாதா கொடியுடன் நின்றாள்,
குதிரை, நாய்,யானை வந்தன,
கிளி காக்கா மயிலும் வந்தன,
கோவில் குளம் எல்லாம் வந்தன
குளத்தில் வாத்து அழகாய் மிதந்தன
கீழ்ப்படியில் செட்டியார் வந்தார்,
அவரைச்சுற்றி கிண்ணங்கள் வந்தன,
அரிசி ,பருப்பு சர்க்கரை நிரம்பின
செட்டியார் கடை நிறைவைத் தந்தன
நிஜ எலியும் கொலுவுக்கு வந்தது,
தினமும் செட்டியார் கடைக்கு போனது,
அரிசி ,பருப்பைக் காலி செய்தது
பத்து நாட்களும் வயிரை ரொப்பியது,
எங்கள் வீட்டுக் கொலு
என்க்குப் பிடித்த கொலு
தினமும் சுணடல் வித்விதமாய்
என் அம்மா படைப்பாள் பலவிதமாய்

 

நீங்களும் உங்கள் அம்மாவுக்கு உதவலாம். உங்கள் பள்ளியின் மாடல், அல்லது எதாவது ஒரு கோவில், மலையிலிருந்து விழும் அருவி, உச்சிப்பிள்ளையார், என்று களி மண்ணில் கட்டி நிறைய சிறு பொம்மைகளையும் உபயோகித்து அசத்தலாம். இதனால் உங்கள் அறிவுத்திறன், கற்பனை வளம், கைத்திறன் எல்லாம் வளரும். நம் நாட்டுக் கலாசாரத்தில் பங்கு பெற்று மன நிறவைப் பெறலாம். நிறையப் பாராட்டுப் பெற இன்னும் நிறைய புத்திதாகச் செய்ய ஊக்கம் கிடைக்கும். பலர் வந்து போவதால் உறவு வளரும், அம்மாவுக்கு உதவி புரிய ஒரு வாய்ப்புக் கிடைக்கும், பெரியவர்களுக்குப் பணிந்து நமஸ்கரிப்பதால் வினயம் பெருகும்.

மரியாதையுடன் நடக்க அல்லது கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. இதெற்கென்று பல பாடலகள் கற்றுக்கொண்டு அம்பாள்; முன் பாடலாம். மாலை குத்துவிளக்கு ஏற்றி மெய்மறந்து பாட அந்தச் சக்தியான அம்பாள் நாம் கூப்பிட்டக் குரலுக்கு ஓடொடி வந்து விடுவாள். பாரதியார் நவராத்திரிப் பாடல் ஒன்று பாடியிருக்கிறார்.

நீங்களும் இதற்கு ஒரு ராகம் போட்டு பாடுங்கள்

உஜ்ஜயினி நித்ய கல்யாணி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி (உஜ்ஜயினி)

உஜ்ஜய காரண சங்கர தேவி
உமா சரஸ்வதி ஸ்ரீ மாதாஸா (உஜ்ஜயினி)

வாழி புனைந்து மஹேசுவர தேவன்
தோழி, பதங்கள் பணிந்து துணிந்தனம் (உஜ்ஜயினி)

சத்ய யுகத்தை அகத்திலிருத்தி
திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி (உஜ்ஜயினி)

நவராத்திரி வாழ்த்துக்கள்

அன்புடன் அம்ம்ம்மா

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants