தாயென்று கும்பிடடி பாப்பா
- குழந்தைகள் தினம்
இணையப் பாட்டி
நேரு மாமா
உங்கல் எல்லோருக்கும் வனக்கம், நான் சின்ன பொண்ணு பேசறேன், ஏன் தெரியுமா? நவம்பர் 14 எங்கல் தினம், புரிலையா? அதான் குழந்தைகள் தினம். இன்னிக்கி எங்களுக்கு ரொம்ப மஜாதான், என்ன மஜானு கேட்கறீங்க்லா? வந்து, வந்து, எங்க ஸ்கூல்லே பிஸ்கெட், சாக்கலேட்டு தருவா, எங்க மிஸ், எங்கம்மா ரொம்ப நல்ல அம்மா, எங்கம்மா சொன்னா, வந்து, வந்து, இன்னிக்கி சாச்சா நேஹ்ரு பிறந்த நாளாம், எங்கம்மா சொல்றா அவருக்கு குழந்தைகல்னா ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். அவர் சட்டேல எப்போதும் ரோஜாப்பூ வச்சுப்பாராம். அவர் சொல்வாரம், நாங்கள்லாம் தோட்டத்தில் வளரும் அழகான மொட்டுக்கல்னு. அப்புறம், வந்து, வந்து, நாங்கல்ல்லாம் இப்ப குழந்தைகல்தானாம், ஆனாக்க பின்னாலே வரப் போற சிடிசெனாம், அம்மா சொன்னா. ஆமாம் சிடிசன்னா என்ன? இன்னும் என்ன சொன்னா எங்கம்மா, மறந்துப்போச்சே, ஹா! ஞாபகம் வந்திடுச்சு, குழந்தைகல் தான் இந்தியாவை இன்னும் சிறப்பாக்கற அஸ்திவாரமாம். நான் சின்னவ அதனாலே நான் அவரைப் பாத்ததில்லை. அம்மா போட்டோ காட்டினா, நல்ல வெள்ளைத் தொப்பியோட சிரிச்சிண்டு சட்டைலே ரோஜா சொருகிண்டு ஜமனு இருந்தார். குழந்தைகல்னா அணைச்சு சிரிச்சு பேசி மகிழ்வராம், அதான் அவர் பிறந்த நாள் குழந்தை தினமா கொண்டாடறா.எனக்கு எங்கம்மா ஔவையார் படப் போட்டுக் காட்டுவா. நான் சூப்பர் ஸ்டார்ரும் பாப்பேன் னு சொன்னேன். சரி ராகவேந்த்த்ரா படம் காட்ரேன்னு சொல்லிருக்கா. சாயங்காலமா மேலா அழைச்சிண்டு போவாளே! ஹாய்! ஜாலி! அங்கு ராட்டினம் சுத்துவேன், நிறைய விளையாட்டு இருக்கும். ஆனா அங்கில், ஓ ஸாரி, எங்கம்மா ஆங்கிலத்திலதான் இந்த மம்மி டேடி எல்லாம். அழகாக் தமிழில் கூப்பிடுன்னு சொல்லுவா, பின் என்ன கூப்படறது மாமான்னு கூப்பிடவா?
சரி, என் பேரு சொல்லையே நான் தான் விசாலம 1ஆங் கிளாஸ், ஹி..ஹிஹி..
பின் குறிப்பு: குழந்தையாக மாற ஆசை, ஆகையால் இந்தக் குழந்தைகள் தினத்தில் கற்பனைக் குழந்தையாக மாறி என் ஆசையைத் தீர்த்துக் கொண்டேன். அப்பா! எவ்வள்வு நிம்மதியாக இருக்கிறது!
அன்புடன் அம்ம்ம்மா
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















