Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  என்னைப்பற்றி

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.


Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
எட்டுக்கால் பூச்சி
இணையப் பாட்டி



Spider - image courtesy: Wikipedia

சிலந்தி

சிலந்தி அல்லது எட்டுக்கால் பூச்சிகளைக் கண்டு நாம் பயப்படுகிறோம். ஆனால் உண்மையாக எல்லாப் பூச்சிகளும் நம்மைக் கண்டு பயப்படுகின்றன. நீங்கள் சிலந்தி வலைப் பின்னுவதைப் பார்த்திருப்பீர்கள். சுவற்றின் மூலைகள் அதற்கு மிகப் பிடித்த இடம். அதன் உமிழ்நீராலேயே அது வலைப் பின்னும். அது எவ்வளவு லாவகமாக அதைப் பின்னும் என்பது அதை உற்றுக் கவனிக்கப் புரியும். பகுதியில் அந்த வலையின் நூல் அறுந்தாலும் திரும்பவும் அந்த இடத்தை மிக அழகாக பின்னி விடும். பெரியக் கட்டடக்கலை நிபுணர் போல் தன் வலையைத் தயார் செய்யும்.

உலகத்தில் சிலந்தியின் வகைகள் சுமார் 50000 என்று சொல்ல்கிறார்கள். ஆஸ்ட்ரேலியாவில் மிகவும் விஷம் வாய்ந்தச் சிலந்திகள் உள்ளனவாம். சிலந்தி அல்லது எட்டுகால் பூச்சி கடித்தால் அவரவர் உடல் அமைப்புக்கேற்றவாறு எதிர்ப்பலன்கள் reaction இருக்கும் என்கிறார்கள் டாக்டர்கள். சிலருக்கு உடல் முழுவதும் தடிக்கும், அரிக்கும், சிவப்பு சிவப்பாக, பட்டை பட்டையாக தோலின் மேல் அடையாளம் வந்து அரித்து தொல்லைக் கொடுக்கும். சிலருக்குத் தலைவலியுடன் சுரமும் வரலாம். குழந்தைகளுக்குத்தான் பாதிப்பு அதிகமாகத் தெரியும்.

உங்களுக்கு ஒரு உண்மைத் தெரியுமா? பட்டுப்பூச்சியினால் பட்டுத் துணி நெய்வதுப் போல் சைனாவின் ராணி ஒரு தடவை தனக்கு சிலந்தி வலையினால் இழைக்கப்பட்ட மேலங்கி வேண்டும் என்றாளாம் ஏன் என்றால் எல்லோரை விட அவள் அதிகச் சிறப்பு வாய்ந்தப் பெண்மணியாகவும் மாறுப்பட்டு இருக்க வேண்டும் எனபதை நிரூபிக்க இதைப் போல் கேட்டாள். அதைச் செயல் படுத்த சுமார் 8000 சிலந்திப் பூச்சிகள் வலையிலிருந்து அவள் மேலங்கி செய்யப்பட்டதாம்.

இந்த "ஸ்பைடர்" இவ்வளவு தொந்தரவு கொடுத்தாலும் நம் குழந்தைகளுக்கு "ஸ்பைடர் மேன்" என்றால் எவ்வளவு மோகம். ஒரு தனி மகிழ்ச்சி. யார் இந்த ஸ்பைடர் மேன்? சிலந்தி மனிதன்? அவன் மேல் கொண்ட மோகத்தால் அவன் போல் பலவித ஷ்ர்ட்டுகள் பேனாக்கள் மற்ற பலப் பொருட்கள் விற்கப் படுகின்றன.

ஆம் உண்மையான் சிலந்தி மனிதன் மிஸ்டர் ஸ்டீவன் கச்சர். அவர் உண்மையான சிலந்திகளைப் பற்றி ஆராய்ந்து அலசி, பலவிதமான கதைகளை எழுதி பின் "ஸ்பைடர் மென்" சினிமாவும் எடுக்க ஆரம்பித்தார். அவர் எடுத்தப் படங்களில் {அர்ச்சனோபோபியா} ஒரு பெரிய சிலந்தி ஊர்ர்ந்து 14 அடிகள் ஒரு செறுப்புக்குள் புகுந்து கொள்கிறது. படத்தின் பெயர் "ஜேம்ஸ் அண்ட் தெ ஜயிந்த் பீச்ச் james and the giant peach. ஸ்பைடர் மேன் எப்படி இப்படி ஆனான்? படத்தில் பீட்டர் பாஸ்கர்ஐ ஒரு சிலந்தி வந்து கடிக்க அவன் ஒரு சூப்பர் ஹீரோவாக மாறி பறந்த பல சாதனைகள் செய்கிறான்.

இந்தப் படங்கள் பார்ப்பதற்கு மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்றாலும் இது ஒரு கற்பனைதான், நிஜம் இல்லை என்று எண்ணிதான் பார்க்க வேண்டும். அது அல்லாது அவனைப் போலவே சாகசச் செயல் செய்ய முனைந்தால் நமக்குத்தான் நஷ்டம். எங்கேயாவது ஒரு மாடியுலிருந்து இன்னொரு மாடிக்குத் தாவ முடியுமா? கை கால்கள் தான் உடையும்.

அன்புடன்

அம்ம்ம்மா

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants