Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  என்னைப்பற்றி

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.


Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
பாபாவின் நாடகம்
இணையப் பாட்டி



சொலவது ஒன்று செய்வது ஒன்று

முன்னுரை

பகவான் சாயி தன் பள்ளி நாட்களை உரவக்கோண்டா என்ற இடத்தில் கழித்தார். அப்போது பள்ளிக்காக அவரே ஒரு கதை எழுதி, அதை நாடகமாக்கி, முக்கிய பாகத்தில் நடித்தார். நாம் வாழ்க்கையில் முக்கியமாகக் கடைப் பிடிக்க வேண்டியது, கதையின் தலைப்பு, "சொலவது ஒன்று செய்வது ஒன்று" என்று நான் கொடுத்துள்ளேன், அந்தக் கதையை ஒரு நாடகமாக்கி எழுதியுள்ளேன்

சாயிராம்

முதல் காட்சி

ஒரு ஹால், அதில் பல பெண்மணிகள் அமர்ந்திருக்கின்றனர், ஒரு பெண்மணி ஒலிபெருக்கில் ஸ்ரீ மஹாபாகவத்திலிருந்து ஒரு காட்சியைப் பற்றிப் பேசுகிறாள்: பாத்திரங்கள் {கிருஷணன் ,அவன் தாயார் லலிதா ,பல பெண்மணிகள் ஒரு கண்ணில்லாதவன் ஒரு சன்யாசி தன் சிஷ்யனுடன்}

பெண்மணி: "அன்பர்களே தானம் அவசியம் நீங்கள் செய்ய வேண்டும். கொடை வள்ளல் கர்ணனைப் பாருங்கள், சாகும் நிலையிலும் தன் குண்டலத்தை யாசிக்க வந்த பிராமண்ருக்குக் கொடுத்து விட்டான். கூடிய வரை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள் ஆனால் நல்ல கட்டு மஸ்தான உடம்புடன் கூடிய சோமேபேறிகளாகத் திரிபவர்களுக்குk காசு கொடுத்துk கெடுக்காதீரகள். ஊனமுற்றோருக்கும் வயதானவருக்கும் மனம் விட்டு தானம் செய்யுங்கள். இன்றே தானம் செய்யப் பிரமாணம் எடுத்துக் கொள்வோம், என்ன தயாரா?

எல்லோரும்: "தயார், இன்றே ஆரம்பிக்கிறோம்"

காட்சி மாறல்

ஒரு கண்ணில்லாத வயதானவர் வருகை, கை நீட்டி யாசிக்கிறார். பேசினவளின் காலைத் தொடுகிறார், அந்தப் பெண்மணி முகம் சுளிக்கிறாள். ஒரு ஓரமாக நகருகிறாள்.

பெண்மணி: "போ போ, ஒன்றுமில்லை, இதே தொல்லயாய்p போச்சு."

ஒரு ஹரிதாஸ் காவி வஸ்திரத்துடன் சந்தனங்கள் அப்பி, பஜன் பாடிக்கொண்டு அவளிடம் வருகிறார், கைகளைத் தூக்கி ஆசீர்வதிக்கிறார்.

ஹரிதாஸ்: "தீர்க்க சுமங்கலி பவ"

பெண்மணி: "என்ன அருமையான் பஜன், எவ்வள்வு மனச்சாந்தியைக் கொடுக்கிறது? இருங்கள்" தன் கைப்பையைத் திற்ந்து ஒரு நூறு ரூபாய் நோட்டு எடுக்கிறாள்.

"இந்தாருங்கள், என்னை ஆசீர்வதியுங்கள்"

கீழே விழுந்து நம்ஸ்கரிக்கிறாள்.

அவள் மகன் கிருஷ்ணன் கூடவே இவைகளைப் பார்க்கிறான்.

கிருஷ்ணன்: "அம்மா, என் செல்ல அம்மா.

பெண்மணி: "என்னடா கண்ணா, என் பேச்சு எப்படி இருந்தது?கேட்டாயா?"

கிருஷ்ணன்: "கேட்டேனே, பாகவதக் கதையின் போது என்ன பேசினீர்கள்? இப்போது என்ன செய்தீர்கள்? சொல்வது ஒன்று செய்வது ஒன்றா? அந்தக் கண் இல்லாதவனுக்கு ஒன்றுமில்லை என்றுச் சொல்லிவிட்டு இந்தச் சாமியாருக்கு நூறா?

பெண்மணி: "சீ, அதிகப் பிரசங்கி, வாயைப் பொத்து, நீ சின்னப் பிள்ளை, இதற்கும் உனக்கும் சம்பந்தமில்லை. சொல்வதை யாராவது செய்கிறார்களா? போ போ, உன் வேலையைப் பார்"

காட்சி இரண்டு

பாத்திரங்கள் - கிருஷ்ணா, கிருஷ்ணாவின் தந்தை நாராயணன், ஒரு ஏழைப்பையன் ராமு, ஒரு காலேஜின் ஐந்து மாணவர்கள்

காட்சி

காரியாலயத்தில் ஒரு ஹால். அப்பா கல்வியைப் பற்றிப் பேசுகிறார்.

நாராயணன்: "கல்வி எல்லோருக்கும் ரொம்ப முக்கியம், கல்வி நம் கண் போன்றது. திருவள்ளுவர் சொல்லுகிறார்,

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனைவர் கல்லாதார்

உவர் நிலம் ஒன்றுக்கும் உதவாது. விளையாத உவர் நிலம் ஒன்றுக்கும் பிரயோசனமில்லை. அதேபோல் கல்லாதவர் உயிரோடு இருப்பதால் ஒருவருக்கும் பிரயோசன்மில்லை, அவரால் பயனில்லை என்கிறார் வள்ளுவப் பெருமான். ஆகையால் இளைஞர்களே, மாணவர்களே, பல தடைகள் வந்தாலும் மனச்சக்தியினால் படிப்பை முடிக்க வேண்டும். கல்விக்கு அளவே கிடையாது, படித்துக்கொண்டே போகலாம், யாருக்காவது எதாவது கேட்க வேண்டுமா?"

வாசலிலிருந்து ஏழை ராமு நுழைகிறான்.

ராமு: "ஸார், ரொம்ப நன்றி, எத்தனை அழகாகக் கல்வியின் சிற்ப்பைக் கூறினீர்கள்? எனக்குப் படிக்க ஆசை இருந்தும் வசதி இல்லை, கல்வி பெற ஏங்குகிறேன்"

நாராயணன: "அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?"

ராமு: "உங்களைப் போல் உயர்ந்த எண்ணங்கள் கொண்டவர் தான் எனக்கு உதவ முடியும். என் பள்ளி பீஸ் க்ட்ட முடியவில்லை. இந்த மாதம் ஒரு சில ரூபாய் குறைகிறது, தயவு செய்து உதவுங்கள்"

நாராயணன்: "ஒ, ச்ச்சு, மறந்தே போச்சு, என் பர்ஸ் காலி, {தன் காலி பர்ஸைத் திறந்து காட்டுகிறார்}" என்னிடம் ஒரு பைசா கூட இல்லையே."

ராமு சோக்மாக வெளியே போகிறான்.

ஐந்து காலேஜ் மாணவர்கள் த்பதப என நுழைகிறார்கள்.

மாணவத் தலைவன்: ,"ஸார், ஒரு சின்ன உதவி, எங்கள் ஏரியாவில் ஒரு புது இன்ஸ்பெக்டர் வந்திருக்கிறார். அவருக்கு ஒரு சின்ன பார்டி வைக்கப் போகிறோம், நீங்கள் அவசியம் வந்து கௌரவப்படுத்த வேண்டும்"

நாராயணன: {முகம் மலர} "அவசியம் வரேன், நீங்கள் அழைத்து நான் வராமலா?"

தலைவன்: "இன்னொரு வேண்டுகோள், நாங்க்ள் பார்ட்டிக்கு பணம் கலெக்ட் செய்கிறோம், கொஞ்சம் ஏதாவது நீங்கள் டொனேஷன்.."

நாராயணன்: "அதற்கென்ன? இதற்கில்லாமலா? " {இடுப்பில் இருக்கும் பர்ஸைத் திறந்து ஐநூறு ரூபாயைக் கொடுக்கிறார்}

மாணவர்கள்: "தேன்க் யூ சார்"

கிருஷ்ணன் எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

கிருஷ்ணா: "அப்பா, அப்பா"

நாராயணன்: "என்ன கிருஷ்ணா?"

கிருஷ்ணா: பெரிய லக்சர் கலவியைப் பற்றிக் கொடுத்தீர்கள், ஆனால் பாவம், அந்த ஏழைப் பையன் ராமுவுக்கு ஒரு பைசா கூடக் கொடுக்கலயே, ஏன் காலி பர்ஸைக் காட்டினீர்கள், உள்ளே வேறு பர்ஸில் நிறைய ரூபாய்கள் இருந்ததே"

நாராயணன்: {முகம் மாற} "உனக்கென்ன அதைப்பத்தி இப்போ?"

கிருஷ்ணா: "பொய் சொல்லலாமா? அப்பா, அந்தக் காலேஜ் மாணவனுக்கு மட்டும் பணம் கொடுத்தீர்களே.

நாராயணா: "சின்னப் பிள்ளயாக லட்சணமா சும்மா இரு"

கிருஷ்ணா: 'ஏம்பா, பார்டிக்கு பைசா வேஸ்ட் செய்வதை விட அந்த ஏழைப்பையனுக்கு ரூபாய் கொடுத்திருக்கலாமே"

நாராயணன்: "நிறுத்தறயா, சும்மா தொண தொணன்னு, சொலவதை யாராவது செய்கிறார்களா?

காட்சி மூன்று

பாத்திரங்கள் - ஆசிரியர், சில மாணவர்கள், கிருஷ்ணா

காட்சி - பள்ளி அறை, ஐந்தாம் வகுப்பு, ஒரு மேஜை, ஒரு நாற்காலி, மற்ற பெஞ்சுகள்

ஆசிரியர் நுழைகிறார்.

ஆசிரியர்: குழந்தைகளே, இன்று ஒரு இன்ஸ்பெகடர் திடீர் விஜயம் செய்யப் போகிறார், அவர் உங்களை எத்தனைப் பாடம் நான் நடத்திருக்கிறேன் என்று கேட்டால் 33 பாடங்கள் என்று சொல்லுங்கள் சரியா?

மாணவர்கள்: சரி சார்.

{கிருஷ்ணன் வாயைத் திறக்கவே இல்லை}

ஆசிரியர்: நான் இப்போது 33வது பாடம் ஸ்ரீ ஹரிச்சந்திரா நடத்துகிறேன், அந்த இன்ஸ்பெக்டர் வந்ததும் திரும்பவும் இதையே புதிதாக நடத்துவது போல் பாவனை செய்து திரும்பவும் நடத்துகிறேன். இப்போது என்ன கேள்விகள் கேட்கிறேனோ, அதையே திரும்பவும் கேட்பேன், புதிதாக பதில் சொல்வது போல் சொல்லுங்கள். நீங்கள் "டக்கு டகென்று" பதில் சொல்ல அவரும் உங்கள் திறமையில் மயங்கி விடுவார், சரியா?

மாணவர்கள்: "நல்ல ஐடியா சார்"

கிருஷ்ணா: "இது சரியில்லை"

ஆசிரியர்: "நீ சும்மா இரு, அதுவே போதும்'

"டண் டண் டண் டண்" லஞ்ச் பெல் அடித்தது.

கிருஷ்ணா மெள்ள ஆசிரியரிடம் போகிறான்.

கிருஷ்ணா: ஸார், இன்று நீங்கள் ஹரிச்சந்திரா பாடம் எடுத்தீர்கள் இல்லையா?

ஆசிரியர்: ஆமாம், அதில் என்ன சந்தேகம் உனக்கு?

கிருஷ்ணா: எனக்கு சந்தேகம் ஒன்றும் இல்லை, ஆனால் பொய்யே பேசாமல் பல கஷ்டங்கள் பட்ட ஹரிசந்திரன் கதைyai எடுத்து எங்களைப் பொய் சொல்லச் சொன்னீர்களே, இது முறையா ஸார்? இது தவறு இல்லையா?

ஆசிரியரின் முகம் கோபத்தால் மாறுகிறது.

ஆசிரியர்: "ஆரம்பிச்சுட்டயா, யாராவது சொல்வதைச் செய்கிறார்களா? போ, உன் வேலையைப் பார், முட்டாள்."

காட்சி 4

வீடு, முன் அறை, இரண்டு நாற்காலிகள், ஒரு டேபிள்

பாத்திரங்கள் - கிருஷ்ணன், பெற்றோர்கள், திரு நாராயணன், திருமதி லலிதா

கிருஷ்ணன்: பள்ளியிலிருந்து வேகமாக வந்து தன் பள்ளியின் பையை வேகமாக டேபலில் வீசுகிறான்.

கிருஷ்ணா: அப்பா, நான் பள்ளி போக மாட்டேன்.

நாராயணன்: ஏன் கிருஷ்ணா, என்ன நடந்தது?

கிருஷ்ணா: எல்லோரும் நன்றாக லெக்சர் கொடுக்கிறீர்கள், அறிவுறை வழங்குகிறீர்கள், ஆனால் அதுபோல் ஒருவரும் நடப்பதில்லை ஸார் ஹரிச்ந்திரா நடத்தி பொய் பேசச் சொல்லுகிறார். நிங்களும் அப்படியே சொலவது ஒன்று, செய்வது ஒன்று என்று இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல் நாங்கள் நடக்க உதவுவதில்லை. இப்படிப்பட்ட படிப்பு தேவையா? பெரியவர்கள் உதாரணமாக இருக்க வேண்டாமா? அம்மா ஒன்று சொல்கிறர். வேறு செய்கிறார், நீங்ளும் அப்படித்தான். அப்பா, நான் குழம்பிப் போகிறேன், இதுவா கல்வி?

அப்பா அம்மா முகத்தில் ஈயாடவில்லை பிரமித்து நிக்க திரை போடப்படுகிறது.

அன்புடன் விசாலம்

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants