Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  என்னைப்பற்றி

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.


Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
ஸத்ய சாயி கவசம்
இணையப் பாட்டி



ஸாயி பகதர்களுக்கு,

நவம்பர் 23ம் தேதி ஸ்ரீ சத்திய சாயி பாபா அவர்களின் அவதாரத் திருநாள். இந்த நாளில் அவரது அவதார ஸ்தலமான புட்டபர்த்தியில் லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து அவரின் அருளைப் பெறுகிறார்கள். நானும் அவர் பாதகமலங்களை வணங்குகிறேன்.

அவர் பிறந்த ரஹஸ்யத்தை அவர் தாயார் ஈச்வரம்மா ஒரு சமயம் கூறினார், "ஒரு நாள் காலையிலே என் மாமியார் என்னிடம், 'சத்திய நாராயண ஸ்வாமி கனவிலே வந்தார். அவர் சங்க்லபத்திலே உனக்கு எதாவது ஏற்படலாம் பயப்படாதே'ன்னு சொன்னங்க. அந்தக் காலையிலேயே நான் கிணத்திலே ஜலம் இழுக்கப் போனேன். அப்போ திடீர்னு எங்கேயிருந்தோ ஜொலிக்கிற ஒரு நீல வெளிச்சம் பந்து மாதிரி உருண்டு என்னைக் குறி பார்த்து வந்தது அது எனக்குள்ளேயே சுலபமா நுழைஞ்சுட்டதாகத் தெரிஞ்சது. அப்படியே மயக்கம் போட்டு விழுந்து விட்டேன்".

இன்னொரு சம்பவம், இதையும் அந்தத் தாய் சொன்னார், "நல்லா தெளிவா நினவிருக்கு, அப்போ ஸ்வாமி ஒன்பது மாதக் குழந்தை, குளிப்பாட்டி உடை போட்டு மையிட்டேன், வீபூதி வச்சு, சத்யம்மா கோயிலில் குங்குமம் இட்டு, தூளிலே போட்டு ஆட்டினேன். அடுப்பிலே பால் பொங்கினதாலே இறக்க வந்தேன். குழந்தையோட அழுகைக் குர,ல் கேட்டது, ஆச்சரியம் இதுதான் முதல் தடவை, அழும் குரல் கேட்பது. ஓடிப்போனேன், மடியில் வைத்துக் கொண்டேன். அதன் உடம்பு சுற்றியும் ஒரு ஜோதி வட்டம் சூழ்ந்திச்சு, நல்ல பிரகாசம் ஆனாலும் எனக்குக் கண் கூசவில்லை, ரொம்ப ஹிதமா ஜில்லுனு இருந்தது, அப்படியே மெய்மறந்து உட்க்கார்ந்திருந்தேன். என் கண் மூடிக்கொண்டது. சுற்றுப்புற உணர்ச்சியே இல்லை, என் மாமியார் வந்து எழுப்பின பிறகுதான் உணர்வு வந்தது".

பகவானின் பொன் மொழிகள்:

நம் அனவருக்கும் "தான்" என்ற கர்வமும் ஆண்வமும் இருக்கின்றதன. இதன் காரணமாகவே நமக்கு சுயநலம் உண்டாகி, நம் செயல்களெல்லாம் நம்மைச் சுற்றியே சுழன்று கொண்டிருகின்றன. இநத ஆணவத்தை விட்டொழித்தால் மன்னிக்கும் மனப்பான்மை உண்டாகும். ஆணவம் ஒன்றே நம் துன்பங்களுக்கெல்லாம் காரணம். பொறாமை மிகவும் பயங்கரமானது. எந்த நோய்க்கும் மருந்து கிடைக்கும், ஆனால் பொறாமைக்கு மருந்து கிடையாது. துவேஷங்கள் அழிவிற்குக் காரணங்கள். கௌரவர்கள், ஹிரண்யாட்சன், சிசுபாலன் எல்லோரும் இதன் காரண்மாக அழிய நேரிட்டது. கோபத்தினால் நம் வலிமை குறைந்து போகிறது, ஆரோக்கியம் குறைகிறது.

தலைக்கு மேல் விசிறி சுழல்கிறது, அதன் விசையை நிறுத்தினால் சுழ்ற்சியின் வேகம் குறந்து மெல்லச் சுழன்று ஓய்ந்து, பின் தான் நிற்கும். அது போல் தீய குணங்களைக் கூட அவை தீயவை என்று உணர்ந்து மெல்லக் குறைத்துக்கொண்டே வந்தால் கடைசியில் நீங்கள் அதிலிருந்து விடுபடுவீர்கள், பின் மனத்தூய்மை கிடைக்கும்.

மூன்று தத்துவங்கள், அவற்றின படி நடந்தால் எல்லாத் துறைகளிலும் மேம்பாட்டை அடைய முடியும். முதலாவது தெய்வத்தின் மேல் அனபு, தெய்வப்ரீதி, இரண்டாவது பாவத்தைக் கண்டு பயம் (பாப பீதி), மூன்றாவதாக சமூக நீதி (சங்க நீதி), எல்லாவற்றுக்கும் மூலம் தெயவத்தின் மேல் அனபு.

பாபா

சாயி பக்தர்களுக்கு அவர் பிறந்த நாளன்று அவரது கவசம் அனுப்புவது எனக்கு மிக மகிழ்ச்சி, படித்து அருள் பெறுவோம்.

ஸத்ய சாயி கவசம்

ஊழ்வினையும் தொடர்வரு பழவினனயும் ஸாயி நாமம் சொல்லப் பறந்திடுமே, பர்த்தி ஸாயி காக்க என்று படிப்போர்க்குக் கிடைக்கும் இகபர இனபமே.

தாயாகத் தன்னகத்தே ஈர்க்கும் ஸ்ரீ ஸாயிராம்
சேயன் தன் அறிவு மிளிர சிரமதைக்காக்க

ஓங்காரத்தில் வாழ் ஆனந்த ரூபி ஸ்ரீ ஸாயிராம்
ஒருமையாம் மனதில் அமர்ந்து நெற்றியினைக் காக்க

எம்மதமும் சம்மதித்திடும் ஸ்ரீ ஸாயிராம்
செம்மை சேர் வதனமதைச் சீருடன் காக்க

கீதமழை பொழிந்த ஆழிமழைக் கண்ணன் ஸ்ரீ ஸாயிராம்
தீது நோக்கா திசைவிளக்கென இரு கண்ணினைக் காக்க

அலை போன்று அடங்காது செயலுறும் ஸ்ரீ ஸாயிரரம்
புல்லறிவைப் புனிதபடுத்தி இரு புருவமதைக் காக்க

விழலாகி நொந்தவரின் விதி மாற்றி விடும் ஸ்ரீ ஸாயிராம்
அழியாத நின் புகழ் கேடக இரு செவியினைக் காக்க

ஈஸ்வராம்பா ஈன்ற ஈசனவன் ஸ்ரீ ஸாயிராம்
ஈடில்லாது ஈந்து நாசியினைக் காக்க

நந்தா விளக்காம் எங்கள் ஸ்ரீ ஸாயிராம்
நல்லறம் தழைக்க வந்தவன் இரு கன்னமதைக் காக்க

பற்றில்லாப் பரமனவன் எங்கள் ஸ்ரீ ஸாயிராம்
பற்று வைத்தோரைப் பேணுபவன் பற்களைக் காக்க

ஆரவாரமற்ற அமைதி உருவம் ஸ்ரீ ஸாயிராம்
கோரிய வரமளித்து என் நாவினைக் காக்க ஒளிவீசக் காட்சி அளிப்பவன் ஸ்ரீ ஸாயிராம்
ஒழுக்க ஆட்சி புரியும் அவன் கழுத்தினைக் காக்க

நாளெல்லாம் பக்தரைச் சிந்தையில் நிறுத்தும் ஸ்ரீ ஸாயிராம்
வாழ்வெலாம் நயந்து எங்கள் இரு தோளினைக் காக்க

கற்பகச் சோலையின் கனி போலும் ஸ்ரீ ஸாயிராம்
பொற்கையினால் திருநீறு ஈந்து இரு கரமதைக் காக்க

வேத நாயகன் ஆதம் போதகன் ஸ்ரீ ஸாயிராம்
பேதமொழிந்து எம் முதுகினைக் காக்க

தஞ்சமடைவோரைத் தாங்கி அருளும் ஸ்ரீ ஸாயிராம்
வாஞ்சையுடன் விரைந்து வந்து நெஞ்சமதைக் காக்க

அறநெறி காட்டும் ஸ்ரீ ஸாயிராம்
மாறாத அன்புடன் மார்பகம் காக்க

ஏன் எவரென்று கேளாத ஸ்ரீ ஸாயிராம்
பரிவுடன் வந்தெமது இடையினைக் காக்க

கருணையின் கரையிலாக் கடல் ஸ்ரீ ஸாயிராம்
தருணத்தில் வந்தெமது இடையினைக் காக்க

பெற்றவர் தம் பெருமை சேர்க்கும் ஸ்ரீ ஸாயிராம்
கொற்றவன் நீ குறியதனைக் காக்க

இச்சா கிரியா ஞான சக்தியாம் ஸ்ரீ ஸாயிராம்
இதய நாயகன் இரு தொடையினைக் காக்க

கற்றவரும் வியந்து போற்றும் கவிதை தெய்வம் ஸ்ரீ ஸாயிராம்
முற்றாத அன்புடன் எங்கள் இரு பாதங்களைக் காக்க

சத்யதர்ம போதனைகளின் ஊட்டம் ஸ்ரீ ஸாயிராம்
அவை என் அங்கமெல்லாம் நிறைந்து காக்க

சாதகர் நினைவில் ஒளிர்பவன் ஸ்ரீ ஸாயிராம் - எம்
பேத மதியினைச் செம்மையுறக் காக்க

தஞ்சம் என்று வருவோரைத் தாங்கி அருளும் ஸ்ரீ ஸாயிராம்
வஞ்சகரின் அஞ்சுதலின்றும் எமைக் காக்க

சத்தியஸ்வரூபன் எங்கள் ஸ்ரீ ஸாயிராம்
சத்தியம் பிறழாமல் எமைக் காக்க

தர்மஸ்தாபகன் எங்கள் ஸ்ரீ ஸாயிராம்
தரம் தளராமல் எமைக் காக்க

சாந்தஜோதி எங்கள் ஸ்ரீ ஸாயிராம்
காந்தமாகி ஈர்த்து எமைக் காக்க

பிரேமஸாகரம் எங்கள் ஸ்ரீ ஸாயிராம்
பவ ஸாகரத்திலிருந்து எமைக் காக்க

பளபள என் மின்னும் குளிர்மணி விழியான் ஸ்ரீ ஸாயிராம்
மாளாத குஷ்டமதை மாய்த்துக் காக்க

வேதாகம மூல ஞான வித்தகன் ஸ்ரீ ஸாயிராம்
வாதம் வலிப்பு பித்தமதைப் போக்கிக் காக்க

செக்கச் சிவந்த பட்டுடையான் ஸ்ரீ ஸாயிராம்
சொக்குச் சிரங்கு குன்மமதைத் தகர்த்திக் காக்க

கலையனைத்தும் படைத்த ஞானப்பிரகாசன் ஸ்ரீ ஸாயிராம்
சூலை சயம் அகல அருள்வழி நோக்கிக் காக்க

மண்விண் ஊர்த்தி மீதும் நீரிலும் நெருப்பிலும் ஸ்ரீ ஸாயிராம்
கண் மலர் வீசி எவ்விடத்திலும் காக்க

நடக்கையில் கிடக்கையில் நவில்கையில் நிமிர்கையில்
நாடி வந்து ஓடி வந்து ஸாயிராம் காக்க

என் அப்பன் என் அன்னை ஸ்ரீ ஸாயிராம்
என்றென்றும் அகந்தன்னிலிருந்து காக்க

பக்த பராதீனன் எங்கள் ஸாயிராம்
முக்தி நமக்களித்து நன்மையுடன் காக்க

இசைப்பாட இன்குரல் ஈவாய் ஸத்யஸாயி
இனியகுணம் எமை அடையக் காவாய் ஸத்யஸாயி

தன்னலம் கருதா தகைமை ஈவாய் ஸத்யஸாயி
பிறநலம் பேணும் பெருமை தருவாய் ஸத்யஸாயி

இன்பதுன்ப சமநிலை இருக்கச் செய்வாய் ஸத்யஸாயி
ஈகை இரக்கம் இவையாவும் இங்கு தருவாய் ஸத்யஸாயி

நீ நான் என்ற இரண்டு ஆகாய் ஸத்யஸாயி
நான், நீ ஒன்றெனத் தோற்றுவாய் ஸத்ய ஸாயி

அன்றலர்ந்த அன்பு மலர் எங்கள் ஸாயி மன்னன்
என்றும் உலராத தம் மலரடி சேர்க்க!

சோதனைப் பல ஈந்தாலும் போதனையால்
வேதனை தீர்க்கும் ஸாயி எங்கள் பதியவன்

ஓம் ஓம் எனும் ஓங்காரத்தின் உறைவிடமே ஸத்யஸாயி
ஒரு நினைவாக நினை தியானிக்க ஸத்யஸாயி

நீங்காத பக்திதனை அருள ஸத்யஸாயி
நின் கமல் மலர்ப்பாதம் சரணம்

சரணம் சரணம் சத்ய ஸாயி

இதை நம்பிக்கையுடனும் சிரத்தையுடனும் படிக்க கஷ்டங்கள் விலகுகின்றன.

சர்வே ஜனானான் சுகினோ பவந்து சாயிராம்.

அன்புடன் விசாலம்

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants