Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  என்னைப்பற்றி

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.


Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
குடியரசு
இணையப் பாட்டி



அன்பு குழந்தைகளே,

நமது குடியரசுதினம் 1950ல் எப்படி நடந்தது என்று பார்ப்போம்.

1950 ஜனவாரி 26 இந்திய வரலாற்றிலே ஒரு பொன்னேடு. ஒளிமயமான குடியரசு மக்களின் நலத்திற்க்காக, மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் நலம் கருதி உழைக்கும் மந்திரிகள் நம் பாரதத்தைப் பொறுப்புடன் ஆட்சி செய்வார்கள். இதுதான் குடியரசு என்பதின் நோக்கம். அதற்கு முதலில் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்திய ஜனாதிபதிக்காக் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்ல் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர் டாகடர் திரு ராஜேந்திரபிரசாத். இந்தப் பெயரைச் சபையில் அறிவித்தவுடன் மகிழ்ச்சியுடன் கரகோஷமும் எழுந்தன, ஆரவாரங்கள் கைத்தட்டுதல் தொடர்ந்து நீடித்தன. தொடர்ந்து திரு அய்யங்கார் அதைப் படிக்க, பண்டித நேரு பிரேரேபிக்க, சர்தார் ஸ்ரீ வல்லப்பாய் படேல் ஆமோதித்தார். மீண்டும் கரகோஷ்ங்கள் ஹால் முழுவதும் எதிரொலித்தன. சிலர் மேஜையைத் தட்டினர், பின் ஒருவர்க்கொருவர் கைக்குலுக்கிக் கொண்டனர், பின் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும். இதற்கு முன் திரு ராஜேந்திரபிரசாத் முதன் முதலாக காந்தி சமாதிக்குச் சென்று புஷ்பாஞ்சலி செய்தார், பின் மூன்று தடவை வலம் வந்தார். குளிரோ குளிர், எல்லோரையும் விரைக்க வைத்தது. பிரதமர் நேரு, பின் தூணைப்பிரதமர் சர்தார் படேல், அவர் துணைவியார் மனுபென்னும் உடன் இருந்தனர், ஒரு ஓரத்தில் "ரகுபதி ராகவ ராஜாராம்" ஒலித்துக் கொண்டிருந்தது. பஜன் பாடல்களும் பாடப்பட்டன.

மணி பத்து அடித்தது. கடைசி கவர்னர் ஜனரல் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் தகுந்த மரியாதைகளுடன் உள் நுழைந்தார். பல புகைப்பட நிறுபர்கள் கூடி இருந்தனர் பல வி.ஐ.பி.க்கள் நிறைந்திருந்தனர். டாக்டர் திரு ராஜேந்திரபிரசாத் அவர்கள் நுழைந்தார். அவருடன் அவர் குடுமபமும் வந்திருந்தது. அவரை நேராகப் பதவிப் பிரமாணம் செய்யும் இடத்திற்கு ஒரு செக்யூரிடி காப்பாளன் அழைத்துப் போனான். அங்கு அவர் மூத்த தலைவரான திரு ராஜாஜியை வணங்கினார், பாருங்கள் எத்தனைப் பெரிய பதவி வந்தும் பணிவுடன் வினயத்துடன் பெரியவர்களை வணங்கி அவர் ஆசி பெறுவது எத்தனை நல்ல விஷயம். பின் கவர்னர் ஜ்னரல் திரு ராஜாஜி "பாரதத்தின் பொற்காலம்" பற்றியும் அதை எப்படி கடமை தவறாது பாதுகாக்க வேண்டும், எப்படி எதிர்க்காலத்தை மேலும் பொற்காலமாக ஆக்க வேண்டும் என்றும், சொற்பொழிவு ஆற்றினார். பின் நீதிபதி திரு ஹரிலால் ஜே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஆஹா! மிக அருமையான காட்சி இது, அழகான சிம்மாசனம் அமைக்கப்பட்டிருக்க அதில் மிகுந்த கரகோஷத்தின் நடுவே அவர் அமர்ந்தார், பின் அங்கிருந்து முப்படைகளின் தளபதிகள் வந்து மரியாதை செலுத்தினர். 31 பீரங்கி குண்டுகள் வெடிக்கப்பட்டன. முதல் ஜனாபதியாய் அவர் முதல் கையொப்பம் இட்டார். பின் அரச பரம்பரைக் கோச்சு வண்டியில் ஏறிச்செல்ல வழி முழுவதும் மக்கள் வெள்ளம்.

அவர் மேல் பூக்கள் பொழியப்பட்டன. பின் அவர் ஸ்டேடியத்திர்கு வந்து மூவர்ண தேசியக்கொடியை ஏற்றினார். இப்படியாக முதல் குடியரசுதினம் முடிந்தது. இரவில் எங்கும் வண்ண விளக்குகள் ராஷ்டரபதி பவனையும் பின் முக்கியமான மற்ற இடங்களையும் அலங்கரித்தன. இரவு பகல் போல் காட்சி அளித்தது.

இதுதான் முதல் குடியரசுதினம்.

அன்புடன் அம்மம்மா

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants