தாயென்று கும்பிடடி பாப்பா
- தியாக ப்ரம்மம்
இணையப் பாட்டி
கர்நாடக சங்கீதத்தில் முகுடமாக விளங்கிய மூவருள் ஒருவரான ஸ்ரீ தியாகராஜர் பற்றிச் சொல்கிறேன். எல்லா வருடமும் பகுள பஞ்சமி அன்று தை மாதம் அவருடைய ஆராதனை விழாவாக நடக்கும். அன்று காலை பகதர்கள் எழுந்து குளித்துப் பின் தெருவில் ஸ்ரீ தியாகராஜரைப்போலவே ராம பஜனையுடன் உஞ்சவிருத்தி எடுத்து, பின் கோயிலுக்குப் போவார்கள். அங்கு அவருக்குப் பல விதமான அபிஷேகங்கள் நடக்கும். அத்துடன் பஞ்சரத்னக் கீர்த்தனைகள் பல பெரிய வித்துவான்கள் பாடுவார்கள். அதில் நாட்டையில் ஜகதானந்தகா, கௌளையில் துடுகு கல, ஆரபியில் ஸாதிஞ்சனே, வராளியில் கனகனருசிரா, ஸ்ரீராகத்தில் எந்தரோமஹானுபாவா. அது முடிய அடுக்கு ஆரத்தி காட்டுவார்கள். இதைப் பார்க்க மனம் பரவசப்படும். மனதில் ஒரு விதமான சாந்தி உண்டாகும்.
ஸ்ரீ தியாகராஜர் ஸ்ரீ ரரமபிரும்மம் என்பவருக்கும் சீதம்மா என்பவருக்கும் அரும் புதல்வனாகப் பிறந்தார். இவர்கள் முதலில் திருவாரூரில் வசித்தனர். இவர்கள் தெலுங்கு பிராம்மணர் வமசம். இவர்கள் முன்னோர்கள் கிருஷ்ணதேவ ராஜா காலத்தில் இருந்து, பின் தஞ்சாவூருக்குக் குடி புகுந்தவர்கள். தியாகராஜர் சம்ஸ்கிருதம், தெலுங்கு மொழிகள் படித்தார். அவரின் மாமாவிடம் சில சுவடிகள் இருந்தன. அதைப் படித்துப் பார்க்கையில் சங்கீத சமபந்தமாக இருந்தது. அது புரியாமல் அவர் குரு ஸ்ரீ ராமகிருஷ்ணானந்தரிடம் இதைப் பற்றிக் கேட்டார். அவர் ஸ்ரீ நாரத முனிவரைத் தியானித்து பூஜை செய்தால் அவர் இதை விளக்குவார் என்றார். இவரும் நாரத முனிவரைப் பூஜித்தார்.
ஒருநாள் அவர் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது ஒரு சன்யாசி வந்தார், "இங்கு தியாகராஜன் யார்?" என்று கேட்டார்.
"நான் தான் ஸ்வாமி,
"ஒரு பாட்டு பாடேன், கேடக வேண்டும் போல் இருக்கிறது"
தியாகராஜர் அழகாக ஒரு பாட்டுப் பாட, அப்படியே அமிருதமாய் இருந்தது. "உனக்குச் சமமாகக் கானம் செய்பவன் இப்பூவுலகில் இல்லை, இந்தா இந்தப் புத்தகம் தருகிறேன். இதைப் பத்திரமாக வைத்திரு. பிறகு வந்து வாங்கிக்கொள்கிறேன்" என்று கூறிவிட்டு சன்யாசி விடை பெற்றார்.
அன்றிலிருந்து அவர் தன்னையே மறந்தார். ஸ்ரீ ராம கைங்கிரியங்கள் செய்துவந்தார். மனம் அந்தச் சன்யாசியிலேயே லயித்தது. ஒரு நாள் இரவு அந்தப் பெரியவர் நித்திரையில் வந்தார், "நான் தான் நாரதர், உனக்குத் தரிசனம் தந்தேன், புத்தகம் பெயர் ஸ்வரார்ணவம். இது ஒரு சங்கீத கிரந்தம். உன் கண்ணிற்கு மட்டும் தான் அந்தச் சாஸ்திரம் புலப்படும்" இதைக்கூறி மறைந்து விட்டார். தியாகராஜரும் அந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். அது ஒரே ஸ்வர்ணமயமாய் இருந்தது.
அவர் நாரதருக்காக்ச் சில பாட்டுக்கள் பாடினார். அதில் அடாணா ராகத்தில் "நாரத கான லோலா வரநாரத நாராயணா" என்று வராளியில் பாடி இருக்கும் கீர்த்தனைகள் அருமை. இவர் பல பாட்லகளை ஸ்ரீ ராமர் விக்ரஹம் முன்னே அமர்ந்து பாட ஆரம்பித்தார். இவர் தன் பூர்வீகச் சொத்தாக முன்னோர்கள் ஆராதித்த ஸ்ரீராம லக்ஷமண சீதா அனுமத் சமேத விக்ரஹத்தை தன் பூஜை அறையில் அலங்கரித்தார். இவரது பதினாறு வயதிலேயே ராம நாமதாரக மந்திர உப்தேசம் பெற்று எந்நேரமும் ஜபித்து வந்தார்.
ஒரு நாள் வாயில் கதவை யாரோ தட்டினார்கள். கதவைத் திறந்தவுடன் அவர் அப்படியே பரவசத்துடன் தன்னையே மறந்த நிலையில் நின்று விட்டார். கண்களில் நீர் பெருகியது. ஸ்ரீராம லக்ஷமணர் சீதா தேவியுடனும் அனுமாருடனும் தரிசனம் கொடுத்தனர். அன்றிலிருந்து அவருக்கு பாடும் சக்தி பிறந்தது. பல கீர்த்தனங்கள் நீர்வீழ்ச்சி போல் கொட்டின. இவர் பாடிய முதல் பாட்டு "ஏலநீதயா ராது" அடாணா ராகம்.
ஸ்ரீ ராமருக்கு உபசாரம் செய்தார், "உபசாரமுல" பைரவி ராகத்தில் பாடினார். இவர் மேல் பலர் பொறாமை கொண்டு இவர் பாட்டில் லக்ஷண ஞானம் இல்லை, லக்ஷிய ஞானம்தான் என்று அவதூறு பரப்பினார். இதற்கு அவர் "சங்கீத ஞானமு பக்திவினா என்று தன்யாசியில் பாடினார்.
இவர் சிரத்தையுடன் இரவு ராமருக்கு போஜனம் கொடுத்துப் பின் தாம்பூலம் மடித்துக் கொடுத்து, பழம், பால் வைத்து, பல உபஜாரங்களுடன் லாலி பாட்டு, படுக்கைப் பாட்டு, தூங்க ஒரு பாட்டு என்று பாடி, திரையை மூடி விடுவார். காலையில் பாதி பழம், பாதி பால் தான் இருக்கும். தாம்பூலம் மென்று உமிழ்ந்திருக்குமாம். "ராமாநீ ஸமான மெவரு" என்ற பாடலும் "மோஹன ராமா" என்ற பாடலும் பிறந்தன. அவர் புகழைப்பற்றி எழுதினால் எழுதிக்கொண்டே போகலாம். பாடல்களோ பக்தி நிறைந்து சொற்களால் பின்னப்பட்டு எளிமை நடையுடன் இருக்கும்.
இவர் பக்தி, பிரஹலாதரையும், சங்கீதம் நாரத முனிவரையும், சொற்கள் லயம் ஸ்ரீ வால்மீகி முனிவரையும் ஒத்து இருக்கின்றன. இவரைப் பற்றி இன்னும் எழுதுகிறேன். இவரது பாடல்களைக் கற்றுக்கொள்வோம்.
ஸ்ரீதியாகபிரும்மத்தை வணங்குவோம்.
அன்புடன் அம்மம்மா
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||



















