தாயென்று கும்பிடடி பாப்பா
- எமது பாரதம்
இணையப் பாட்டி
அன்புள்ள குழந்தைகளே,
நாம் வாழுவது மிகப் பெருமை மிக்க இந்திய நாட்டில். எத்தனை யோகிகள், அறிஞர்கள், மஹா கவிஞர்கள், கணித மேதைகள், சித்தர்கள், தேசபக்த தலைவர்கள் வாழ்ந்திருக்கின்றனர், எத்தனை மகிமை நிறைந்த கோயில்கள்? நாம் நம் நாட்டின் பெருமையை நிலை நாட்ட வேண்டும். குழந்தைளும் பல வீரதீரச் செயல்களைச் செய்து அன்புடனும் மரியதையுடனும் பண்புடனும் பழக வேண்டும். நம் பாரதத்தின் சிறப்பைப் பாருங்கள், பாடி மகிழுங்கள்.
கோலாட்டம் கும்மி என்று இதற்கு ராகம் அமைத்து ஆடலாம்.
எமது பாரதம்
இமயம் முதல் குமரி வரை எங்கள் பாரதம்எங்கும் புகழ் தங்கும் வளம் பொங்கும் பாரதம்
அறிஞர்களும் அவனியிலே பிறந்த பாரதம்
அருந்துணைவர் காந்திதனை அளித்த பாரதம்
முப்புறமும் கடல் சூழ விளங்கும் பாரதம்
முடியெனவே மலையணிந்த வடிவம் பாரதம்,
அங்கும் இங்கும் ஆன்மீகஒளி வீசும் பாரதம்
ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகானந்தர் உதித்த பாரதம்
வள்ளுவரும் இளங்கோவும் ஒளிர்ந்த பாரதம்
சித்தர் பல அவனியில் வந்தருளும் பாரதம்,
மூவேந்தர்கள் சிறப்பித்த பழைய பாரதம்,
கண்ணனுடன் கலந்த மீரா வாழ்ந்த பாரதம்,
உலகம் போற்றும் "திருக்குறள்" உதித்த பாரதம்
தமிழுக்கு ஒரு ஔவைப்பாட்டி வந்த பாரதம்
கட்டபொம்மன், வ.உ.சி. வீரம் பார்த்த பாரதம்
"பகத்சிங்" நாட்டிற்கே உயிr கொடுத்த பாரதம்
"புரட்சிக்கவி பாரதி" வீர முழக்கமிட்ட பாரதம்,
பூஜ்ஜியத்தின் தத்துவம் கண்டு பிடித்த பாரதம்
நான்மறைகள் தோன்றி வளமுற வைக்கும் பாரதம்
அர்சுனனுக்குபதேசித்த கீதை பிறந்த பாரதம்
வீரத்தின் பிறப்பிடம் ராணிஜான்சி ஆண்ட பாரதம்
சிலம்புடன் நியாயம் கேட்ட கண்ணகி பிறந்த பாரதம்
சிம்மகர்ஜனையாம் வீரசிவாஜி பிறந்த பாரதம்
இராமயண மஹாபாரத காப்பியம் தோன்றிய பாரதம்
மூவிசை மன்னர்கள் இசையால் முக்தி அடைந்த பாரதம்
திருப்பாவை திருவாசகம் நம்மிடம் மலர்ந்த பாரதம்
பார் புகழும் பாரதம் எங்கள் பாரதம்
பாடிப்பாடிப் போற்றுவோம் எங்கள் பாரதம்!
அன்புடன் விசாலம்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||



















