Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  என்னைப்பற்றி

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.


Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
சின்னஞ் சிறு கதைகள்
இணையப் பாட்டி



அன்புக் குழந்தைகளே,

ஒரு சின்னக் கதை படியுங்கள். கதையின் பெயர் "ஏமாற்றாதே".

ஒரு கிராமத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தார். அவர் பெயர் திருமுருகன். அவரிடம் ஒரு கழுதையும் இருந்தது. அதை ஆசையும் பாசமுமாக வளர்த்தார். கழுதைக்கும் அவரை மிகப் பிடிக்கும். ஆனால் அது சற்று சோம்பேறிக் கழுதை. ஆனாலும் அதன் முதுகில் உப்பு மூட்டைகள் ஏற்ற பொதி சுமக்கும். அளவுக்கு மீறி முருகன் பொதியை ஏற்றியதால் அதற்கு வலித்தது. அதன் மனம் கசந்தது. சொல்ல முடியாமல் தவித்தது. ஒரு நாள் உப்பு மூட்டைகளைத் தன் முதுகில் ஏற்றிக்கொண்டு கிளம்பியது. முருகனும் அதன் முதுகில் ஒரு தட்டுத் தட்டிக் கிளப்பினார். அது தனியாக நடந்து போனபோது ஒரு வாய்க்காலைக் கடக்க வேண்டி இருந்தது. மழை பெய்ததால் தண்ணீர் அதன் முதுகு வரை வந்து உப்பு மூட்டைகளை நனைத்தது. உப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் கறைந்தது. இதனால் பாதி கனம் குறைந்து, இலேசானது. கழுதைக்கு மிக சந்தோஷம். தினமும் இந்த யுக்தியைச் செய்யலாம் என்று நினைத்தது. மறு நாளிலிருந்து உப்பு மூடைகளைத் தூக்கி, பின் அது வேண்டுமென்றே வாய்க்காலில் இறங்கி பளுவை இலேசக்கிக் கொள்ளும். இதனால் வியாபாரிக்கு மிக நஷ்டம் வர ஆரம்பித்தது. ஏன் இந்த நஷ்டம் என்று தெரியாமல் குழம்பினான்.

அவன் தினமும் கழுதையுடன் போகாததால் நடந்தது என்னவென்று தெரியவில்லை. ஒரு நாள் அத்னுடன் அவரும் கூடப் போனார். அது வேண்டுமென்றே அந்த வாய்க்காலில் இறங்கி நின்றது. அதைப் பார்த்தவுடன் வியாபாரிக்கு நடக்கும் விஷயம் ஊகிக்க முடிந்தது. ஆகையால் அதற்கு ஒரு பாடம் புகட்ட எண்ணினார். மறு நாள் மூட்டை முழுவதும் ஸ்பான்ஞ் போன்ற ரப்பரை அடைத்தார். கூட இலவம்பஞ்சையும் சேர்ததார். பின் அவைகளை அதன் முதுகில் ஏற்றிவிட்டார். வழக்கம் போல் கழுதை நடந்து வாய்க்கால் வந்ததும் அங்கு போய மூட்டைகளை நனனத்தது. அவ்வளவுதான் பளு இரட்டைப் பங்கு ஆனது. ஸ்பாஞ்சு நீரை உரிஞ்சிக்கொண்டது. அதனால் அந்தக் கழுதையால் பளுவைச் சமாளிக்க முடியாமல் கீழே அமர்ந்து விட்டது. கூட வந்த வியாபாரி அதை எழுந்திருக்கச் சொல்லி அடித்தார். அதனால் எழுந்திருக்க முடியவில்லை. ஆனாலும் நல்ல முதலாளியை ஏமாற்றியதால் நமக்கு இந்த அடிகள் என்று நினைத்துப் பொறுத்துக் கொண்டது. எப்படியோ எழுந்து பின் தன் கெட்ட எண்ணத்திற்கு வருந்தி அழுதது. அதன் கண்ணீரைப் பார்த்து வியாபாரி அதைத் தட்டிக் கொடுத்து மன்னித்து விட்டார். கழுதையும் இனி ஒருவரையும் ஏமாற்ற மாட்டேன் என்று சங்கல்பம் எடுத்தது.

குழந்தைகளே நீங்களும் ஒருவரையும் ஏமாற்ற முயலாதீர்கள். இந்தக் கதையே கவிதையாகத் தருகிறேன்.

முருகன் என்ற ஒருவர்
உப்பு வியாபாரி அவர்,
ஆசையாக வளர்க்கும் கழுதை
பாசத்துடன் இருக்கும் கழுதை
பொதி சுமக்க வருந்தியது
அளவுக்கு மீறி பொதி ஏறியது
உப்பு மூடைகள் பல சேர
தூக்கி நடக்கத் தவித்தது,
ஒருநாள்....
வந்தது பெரிய வாய்க்கால்
மழையினால் நீர் மட்டம் உயர்ந்தது
அதில் நடக்க உப்பு கரைந்தது
கனமும் குறைந்தது
மனம் மகிழ குதித்தது
இந்த யுக்தி தினமும் நடத்த
அதுவும் ஆசை கொண்டது
நஷ்டம் கண்டார் வியாபாரி
புரியாத புதிர் ஆனது
ஒரு நாள் அவரும் கழுதையுடன்
கூட நடந்தார். வாய்க்கால் வர
கழுதை வேண்டுமென் அதில் இறங்க
புரிந்து விட்டது அவருக்கும்
நஷ்டத்தின் காரணம்
பாடம் கற்பிக்க என்ணியது மனம்
உப்புக்குப் பதில் ஸ்பாஞ்சு அடைக்க
கழுதையும் பொதி சுமந்தது
வழக்கம் போல் வந்தது வாய்க்கால்
வேண்டுமென்று அதில் விழ
ஸ்பாஞ்சு நீர்ல் ஊறி
இரட்டிப்பு கனமாக
கீழே படுத்தது கழுதை
யஜமானரும் அதை அடிக்க
தான் ஏமாற்றியதை நினைத்து
நொந்து போக மனம் வருந்தி
"இனி இந்தக் காரியம் செய்ய மாட்டேன்
ஒருவரையும் ஏமாற்ற மாட்டேன்"
என்று மனதில் கூறியது
முருகனும் மன்னித்தார்
ஆசையுடன் அழைத்துச் சென்றார்.

அன்புடன் அம்மம்மா

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants