Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  என்னைப்பற்றி

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.


Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
துளாசி தாஸ்
இணையப் பாட்டி



மார்கழி மாதம் அமாவாசை அன்றுதான் ஸ்ரீஹனுமான் அவதரித்தார். அன்றைய தினத்தை அனுமத் ஜயந்தி என்று கொண்டாடுகிறோம்.

புத்திர் பலம் யசோதைர்யம் நிர்பயத்வம்
அரோகதாம் அஜாட்யம் வாக்படுத்வம்ச
ஹனுமத் ஸ்மரணாத் பவேத்

புத்தி உடலில் சக்தி, மனதிலும் சக்தி, புகழ், தைரியம், பயமின்மை, ரோகமின்மை, நல்ல பேசும் சக்தி, எல்லாம் இந்த ஸ்லோகத்தைப் படித்தால் பெறலாம்.

ஸ்ரீ துளசிதாசர் "ஸ்ரீ ராமசரிதமானஸ்" என்று வடமொழி விரஜபாஷாவில் இராமயணம் எழுதி உள்ளார். வடநாட்டில் இந்தக் காவ்யம் இல்லாத வீடே இல்லை. நமக்கு எப்ப்டி வால்மீகி இராமயணம், கம்ப இராமயணம் இருக்கின்றனவோ, அதே போல் அவர்களுக்கு இந்தக் காவ்யம்.

துளசிதாசர் எப்போதும் இராமரின் சிந்தனையிலேயே லயித்திருப்பார். தினம் காலையில் நீராடி, பின் கோதாவரி நீரை ராமஜபம் ஜபித்துக்கொண்டே செடிகளுக்கும் ஊற்றுவார். ஒரு நாள் ஒரு மரத்தின் கீழே தண்ணீர் ஊற்றும் போது ஒரு குரல் பேசியது, "துளசிதாசா, நீ இராமாயணத்தை தினமும் படித்து வா, எப்போதும் இதைப் படிக்கும் போது ஒரு வயதானவர் வந்து உட்க்கார்ந்து மனம் உறுகிக் கேட்பார். அவர் யாரென்று உனக்குத் தெரியாது. நாளை அவர் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்."

மறுநாள் துளசிதாசர் இராமயணம் படித்து, அந்த வயதான் உருவத்திற்காகக் காத்திருந்தார். ஹே ராமா, கருணாசிந்தோ! தயாசாகரா! யதுகுலதிலகா! என்று வாய் சொல்ல்லிக்கொண்டிருக்க ஒரு முதியவர் வந்தார், உடனே அவரும் முதியவர் காலைப் பிடித்துக்கொண்டார். அந்த முதியவர், "அன்பனே, உனக்கு என்ன வேண்டும்? ஏன் என் கால்களைப் பிடித்துக்கொண்டாய்?"

"எனக்கு ஒன்றுமே வேண்டாம். ராமனை ஒரு தடவையாவது தரிசனம் செய்ய வேண்டும்"

"அதற்குக் காலம் வரும், பொறுமையாக இரு உனக்கு நிச்சயம் தரிசனம் கிடைக்கும்"

பின் அவர் மறைந்து விட்டார். அவர் வேறு யாருமில்லை, சாட்சாத் அனுமானே தான். எங்கு இராம நாமம் உள்ளதோ, அங்கும் எங்கு இராமாயணம் படிக்கப்படிகிறதோ அங்கும், எங்கெல்லாம் இராமனைப் பற்றிப் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் அனுமான் பிரசன்னமாகிவிடுவார். மூன்று நாள் கழிந்த பிறகு துளசிதாசர் சந்தனத்துடன் ராமனுக்குக் காத்திருந்தார். அப்போது ஒரு சிறுவன் வந்தான், "தாத்தா, இது என்ன்?

"இது சந்தனம் குழந்தாய்"

"எனக்கு சந்தனம் கொடுப்பீர்களா?"

"இந்தா, நெற்றியில் வைத்துப்பின் உடலில் பூசிக்கொள்"

மிக மகிழ்ச்சியுடன் அவர் கொடுக்க, அந்தச் சிறுவனும் அதை எடுத்துக்கொண்டான் அப்போது மரத்தின் மேல் இரு பறவைகள் மகிழ்ச்சியுடன் கூவின. சொல்லின, "இந்தச்சிறுவன் தான் ஸ்ரீ ராமர் என்று சொல்லலாமா?"

அதற்குள் சிறுவன் போய் விட்டான்.

பின் அனுமார் காட்சி அளித்தார், உபதேசம் செய்தார், "உன் தந்தை, தாய், சகோதர சகோதரியருடன் பாசம் கொள்ளலாம், ஆனால் இதயத்தில் இடம் அந்தப் பரமனுக்கே, அது பரமனுக்குத்தான் சொந்தம். இறைவன் ஹிருதயவாசி. ஹிருத் தயா, அதாவது தயை அல்லது கருணை கூடியதே இதயம். அங்கு எபோதும் இராமனை வைத்துக் கொள்.

துளசிதாசரும் இராமனைத் தன் இதயத்தில் எப்போதும் அமர்த்திக்கொள்ள, ஒரு நாள் ராம, லக்ஷ்மண, சீதா அனுமாருடன் தரிசனம் கண்டார். ஸ்ரீ ஹனுமானைத் தியானிப்போம், ராமரை ந்ம் இதயத்தில் அமர்த்துவோம்.

அன்புடன் அம்மம்மா

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants