Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  என்னைப்பற்றி

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.


Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
வசந்தகாலம்
இணையப் பாட்டி



Flowers - image: Wikipedia

அன்பு குழந்தைகளே,

உங்கள் செடிகள் பூத்துக் குலுங்குவதை இப்போது பார்ப்பீர்கள். தோட்டம் போனால் நிறைய மொட்டுகளும் பூக்களும் சிரிக்கும், ஏன் என்றால் இது வசந்த காலம். வசந்தம் ஒரு அரசி தான். வசந்த காலம் எப்போது வரும் என்று எதிர்ப்பார்த்திருப்போம், ஏனென்றால் அதற்கு முன் இருப்பது குளிர் காலம், எங்கும் பனி மூட்டம், இதனால் பலருக்கு சீதோஷ்ணம் ஒத்துக்கொள்ளாமல் ஜலதோஷம், இருமல், முட்டுவலி, சுரம், தொண்டைக் கரகரப்பு எனப் பல தொந்தரவுகள் ஏற்படுகின்றன.

இதற்குத் தகுந்த யோகா, பிராணாயாமம் செய்து நம்மைக் காத்துக் கொள்ளலாம் குளிர்ச்சி பொருந்திய உணவுகளைத் தவிர்க்கலாம். இதே போல் மரங்களும் மரங்களின் சில பாகங்களும் குளிரில் சுருங்கி பாதிக்கப் படுகின்றன. வசந்தம் வந்தவுடன் சூரிய வெளிச்சம் பட மகிழ்ச்சியுடன் துளிர்விடத் தொடங்குகின்றன. மாமரத்தில் இளம் தளிர்கள் கொள்ளை அழகு, அத்துடன் நறுமணம். இதே போல் வேப்பம்பூ, மருதாணி பூ போன்றவைகள் வாசனயைக் கொட்டும் பல பூக்கள் பூத்துக் குலுங்கி நம்மை மயக்கும். இந்த வசந்த கால மாதங்களில் தான் மலரின் ஷோ நடத்தப்படும். ஊட்டி, கோடைக்கனால் போன்ற இடத்திலும் மலர்களின் கண்காட்சி நடக்கிறது. எல்லா வகையான தாவரங்களையும் காணலாம். சூரியகாந்திப் பூக்கள் பெரிய தட்டு பிரித்தால் போல் சூரியனைப் பார்த்து விரியும் அழகே அழகு. அதைப் பார்த்து ரசிக்க வேண்டுமே தவிர பறிக்கக் கூடாது. சிலர் சும்மாகவே அதைப் பறித்து பின் ஒவ்வொரு இதழாகப் பிய்த்து போடுவார்கள். பாவம் இதழகள், நம்மைப் போல் அதற்கும் உயிர் இருக்கிறது. இதே போல் தில்லியில் ராஷ்டரபதி பவனின் தோட்டத்தைப் பார்வைக்கு இந்த மாதம் வைப்பார்கள். இதற்கு ரோஸ் கார்டன் என்று பெயர். இங்கு எல்லாவிதமான ரோஜாக்கள், மல்லி, நீரில் பூக்கும் செடிகள், தாமரை, அல்லி போன்றவைகள் எல்லாம் மிக அழகாக இடம் பெறும். ஒவ்வொரு செடியின் கீழே அதன் சரித்திரமே எழுதி இருக்கும். அதன் இயர் பெயர், அதன் வளர்ச்சி, சீதோஷ்ண நிலை என்று எல்லாம் எழுதி இருக்கும்.

பத்து பத்து அடிகளுக்கு காவலர் நின்று பாதுகாப்பார்கள். நிறைய தினுசு வண்ணாத்திப்பூச்சிகள் பறக்கும். தேனி, மற்ற வண்டுகளும் பூவைச் சுற்றி ரீங்காரம் செய்து தேன் உரிஞ்சும் காட்சி மிக அருமை. பல தினசு பறவைகளும் அங்கு வரும், ில கூடுகட்டத் தயார் செய்யும். ஒரு கவலையுமில்லாமல் ஆகாயத்தில் பறந்து பின் மரங்களில் அமர்ந்து கூவும் காட்சிகள், கூட்டம் கூட்டமாகப் பறக்கும் காட்சிகள், கடவுளின் சிருஷ்டியை நினைநது வியக்கத் தோன்றுகிறது. சிவராதிரியுடன் "சிவசிவா" என்று குளிர் போய் விடும்.

இந்த வசந்தக் காலத்தில் வசந்தபஞ்சமி என்ற திருவிழா வரும். இது ஸரஸ்வதிக்கு என்று தனி பூஜை, வட நாட்டிலும் பெங்காலிலும் இதைச் சிறபாகக் கொண்டாடுகிறார்கள். எல்லோரும் மஞ்சள் நிறத்தில் உடை உடுத்தி மஞ்சள் பூக்களினால் சரஸ்வதிக்குப் பூஜை செய்வார்கள். இனிப்பும் மஞ்சள் கலரில் கேசரி, பேடா போன்றவைகள் படைப்பார்கள். மாலையில் மரங்களில் ஊஞ்சல் கட்டி ஆடுவார்கள். "ராசலீலாவும் தான்சென் இசை விழாவும் நடக்கும். ஆகாயத்தில் பட்டங்கள் பல பறப்பதையும் காணலாம். எங்கும் உல்லாசம், பள்ளியில் நடத்தும் பிக்னிக்குகள், டென்னிஸ் மாட்சுகள், கிரிக்கெட் போட்டிகள் என்று எங்கும் கொண்டடட்டம் தான். வசந்த காலம் ரசிப்போம். இயற்கையில் கடவுளைக் காண்போம். மரங்களை வளர்ப்போம்.

அன்புடன் அம்மம்மா

Spring - image: Wikipedia

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants