தாயென்று கும்பிடடி பாப்பா
- சின்னஞ் சிறு கதைகள்
இணையப் பாட்டி
அன்பு குழந்தைகளே,
கடவுள் மேல் பரிபூரண நம்பிக்கை இருந்தால் அவரும் நமக்கு காட்சி அளிக்கிறார். இதைக் குறித்து ஒரு உண்மைக் கதை சொல்லட்டமா?
மிதிலாநகரில் ஒரு சின்னப் பையன் தன் பாட்டியுடன் வளர்ந்து வந்தான். அவனின் தாய் தந்தையர் அவன் சிறு வயதாக இருக்கும் போதே காலமாகிவிட்டனர். அவனுக்குப் பாட்டிதான் உலகமே, ஆனலும் அவன் பள்ளியில் எல்லோரும், "என் அக்கா, என் அண்ணா" என்று சொல்லும் போது அவனுக்கும் தனக்கு அந்த மாதிரி உறவு ஒன்றும் இல்லையே என்று வருத்தமாக இருக்கும். அந்தப் பையன் பெயர் பிரயாகதாஸ். பாட்டி சொல்வதைத் தட்டாமல் சமத்தாகப் படித்து வந்தான்.
ஒரு சமயம் பள்ளி விடுமுறை வந்தது. எல்லோரும் தங்கள் தங்கள் உறவினர்களின் வீடு போவதாகக் கூறினர். இவனுக்கு மிகவும் பிடித்த ஒரு நண்பன் இவனிடம் வந்தான்.
"டேய் பிரயாக், நான் இந்தத் தடவை என் அக்கா வீட்டிற்குப் போகப் போகிறேன், ரொமப மஜா வரும், நீ எங்கே போகப்போகிறாய்?"
"எனக்குத் தெரியவில்லையே பட்டியிடம் கேட்கிறேன்"
பிரயாக் முகம் தொங்கப் போட்டபடி பாட்டியிடம் வந்தான், அழ ஆரம்பித்தான்.
பாட்டி: "ஏன் அழறே? சொல்லுப்பா."
பிரயாக்: "பாட்டி, என் நண்பர்கள் எல்லோரும் ஊருக்குச் செல்கின்றனர். எனக்கு மட்டும் ஒருவரும் இல்லை. நான் எங்கே போவது? எனக்கு யார் சொந்தக்காரர் சொல்லு பாட்டி."
"அட, இதுக்கா அழறே? உனக்கு ஒரு பெரிய அக்கா இருக்கிறாள். அவள் பேரு சீதை. அவள் ஸ்ரீராமரைக் கல்யாணம் செய்துகொண்டு அயோத்திக்கே பட்டத்து ராணியாக இருக்கிறாள். உன் அத்திம்பேர்தான் ராமர். இப்போது சிரி, கண்ணைத் துடைத்தூக் கொள்" என்றாள் பாட்டி. அப்போதைக்கு அவனைச் சமாதானம் செய்த திருப்தி அவளுக்கு.
"பாட்டி, எனக்கு நிறைய பட்சணங்கள் செய்து கொடு. நான் என் அருமை அக்கா சீதாவைப் பார்த்துவிட்டு வருகிறேன்."
பாட்டியும் கொஞ்சம் பட்சணங்கள் செய்து அவன் அழாமல் இருக்க அவனிடம் கொடுத்தாள். மறு நாள் அவன் அந்தப் பட்சணங்களை ஒரு பொட்டலம் கட்டி, வீட்டை விட்டுத் தன் அக்கா சீதையைப் பார்க்க நடந்தான். எப்படியோ சிலரிடம் கேட்டு அயோத்திக்கு வந்து சேர்ந்தான். அயோத்தியில் ராமர் ஆட்சி நடந்த யுகமே வேறு. ஆனாலும் அவன் ஒவ்வொரு வீட்டிலும் அவன் கதவைத் தட்டி, "என் அக்கா சீதை இருக்கிறாளா? என்று கேட்பான். அக்காவைப் பார்க்க முடியாமல் அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. உடல் சோர்ந்து பசி எடுத்து அப்படியே ஒரு கதம்ப மரத்தடியில் படுத்தான். அக்கா, நீ எங்கே இருக்கிறாய்? என்று புலம்ப உணமையாகவே ரதனமயமான ஒரு ரதம் வந்தது. அதிலிருந்து சீதையும் ஸ்ரீராமரும் இறங்கி இவனிடம் வந்தார்கள்.
"அக்கா" என்று பிரயாக் அவளை அணைத்துக் கொண்டான். சீதையும் அவனை உச்சி முகந்து ஆசையாகக் கொண்டுவந்த பட்சணங்களை வாங்கி ருசியும் பார்த்து, பின் கொஞ்ச நேரம் அவனுடன் விளையாடிவிட்டுச் சென்றனர். உடனே இவனும் மூர்ச்சையாகிவிட்டான்.
அங்கு பாட்டி பேரனைக் காணாமல் துடித்துப் போனாள். உள்ளே, வெளியே நடை நடையாக நடந்து எல்லா சாமிகளையும் பிரார்த்தித்தாள். ஸ்ரீ ராமர் திரிலோசனதாஸ் என்ற மகானின் முன் தோன்றி, "இந்தப் பாலகனுக்கு ராம மந்திரம் உபதேசம் செய்" என்றார்.
குருஜியும் பாலகனுக்கு ராமமந்திரம் உபதேசம் செய்ய, பிரயாக் புத்துணர்ச்சியுடன் திரும்ப வந்தான். பாட்டி அவனைக் கட்டிக்கொண்டு, "எங்கே என்னை விட்டுவிட்டுப் போனாய்? நான் தவியாய்த் தவித்து விட்டேன்" என்றாள்.
பாலகனும் நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னான். பாட்டி கேட்டு மெய் சிலிர்த்து போனாள். ஜகன்மாதாவான சீதைக்குத் தம்பியாக இருந்ததால் எல்லோரும் இவரை மாமா பிரயாகதாஸ் என்று அழைக்க ஆரம்பித்தனர்.
மாமா பிரயாகதாஸாக்யோ மஹனீய குணான்வித:
முக்த பாவேன சம்யுக்தோ முதிதாமலமனஸ:
குழந்தைகளே நம்பிக்கையுடன் வணங்குங்கள், அவர் வருவார்.
அன்புடன் அம்மம்மா
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















