தாயென்று கும்பிடடி பாப்பா
- அணைகாத்த சீட சிரோன்மனி
இணையப் பாட்டி
அன்பு குழந்தைகளே நலமா?
பள்ளி லீவு முடியும் தருவாயில் உள்ளது, அப்படித்தானே! சரி ஒரு உண்மைக் கதையைப் பார்ப்போம். நான் சொல்லும் கதைகளில் அநேகமாக நல்ல வழியில் போக பாடம் சொல்லப்பட்டிருக்கும் நீங்கள் கதைப் படிப்பதோடு நில்லாமல் அதன் வழி நடக்கவும் வேண்டும். இதையே தான் பெற்றோர்களும் விரும்புவார்கள் இல்லையா?
மஹாராஷ்டாரவில் ஒரு ஆஸ்ரமம், அங்கு ரிஷி தௌம்யா என்பவர் வசித்து வந்தார். அவரது ஆஸ்ரமத்தில் சில் மாணவர்களும் குருகுலவாசியாக இருந்து
கல்வி கற்றும் வந்தனர் அதில் ஒரு மாணவன் இரத்தினம் போல் பிரகாசித்தான், குரு பக்திக்கு பெயர் போனவன், மிகவும் பணிவானவன், சிறந்த அறிவாளி,
தேசத்திற்கு உயிரையே கொடுப்பவன், நல்ல ஒழுக்கம் உடையவன், எல்லோரிடமும் மிக அன்பாகப் பழகுவான், அவனை எலோருக்குமே மிகவும்
பிடிக்கும். அவன் பெய்ர் அருணி.
ஒரு நாள் அவனது குரு காட்டிற்கு போகச்சொல்லி சிறு குச்சிகள், காய்ந்த உடைந்தக் கிளைகள் பொறுக்கி வருமாறு கட்டளை இட்டார். அந்தக் காலத்தில்
நெறுப்பு மூட்டி உணவு சமைக்க இந்த விறகுகள், குச்சிக்ள் உதவியது. திடீரென்று கருமேகம் சூழ்ந்துக் கொள்ள மழை இலேசாகக் கிளம்பி பின் அடை மழையாகக் கொட்டத்
தொடங்கியது. நடு வழியில் ஒரு அணை ஒன்று கட்டப்பட்டிருந்தது மழைத்த்ண்ணீர் அளவுக்கு மீறி அலைப் போல் மோதியது இதனால் அந்த அந்த அணையில் இலேசாக விரிசல் கண்டது அருணி மற்ற மாணவர்களைத் திரும்பிப் போகச் சொன்னான். "நீ இங்கு தனியாக என்ன செய்வாய்?" என்று அவன் நணபன் கேட்டான், அதற்கு அருணி "நான் இந்த அணையின் விரிசலை மேலும் விரியாதபடி பாதுகாக்க்ப் போகிறேன். இந்த அணி உடைந்தால் ஊரே வெள்ளத்தில் மூழ்கும் எல்லோரும் நாசமடைவார்கள் கால்
நடைகள் வெள்ளத்தில் மூழ்கி மாண்டுப் போகும், வீடு எல்லாம் மூழ்கி விடும். ஆகையால் என்னால் முடிந்த அளவு மேலும் சேதம் ஆகாமல் பார்த்துக் கொள்ளப்
போகிறேன். நீங்கள் எல்லோரும் போய் குருவிடம் நான் தங்கிய காரணத்தைச் சொல்லுங்கள். பாவம் அவர் கவலைப் படுவார்" என்றான்.
மற்ற மாண்வர்கள் திரும்பப் போய் விட்டனர். அருணி அணைப்பகுதிக்குச் சென்றான். அங்கு ஒரு ஓட்டை வழியாக தண்ணீர் வேகமாக வெளியே வருவதைக் கண்டான். தன் கட்டைவிரலால் அந்த ஓட்டையை அமுக்கி அழுத்திப் பிடித்துக் கொண்டான். கட்டைவிரல் சில்லிப்பினால் நீலம் பாய்ந்தது, இரத்த ஓட்டம் நின்றது. அருகில் இருக்கும் நிலங்கள் நீரில் மூழ்கின. பாவம் அருணி மனதில் கடவுள் தியானம் செய்து தன் குருவையும் சிந்தித்து கொஞ்சம் மண்ணைப் பிசைந்து அதில் அடைத்தான், அந்த
வேகத்திற்கு இது எம்மாத்திரம்? பிய்த்துக்கொண்டு விழுந்தது, பல தடவைகள் இதைச் செய்தும் பிரயோசனப் படவில்லை. யோசனைச் செய்தான், பின் தன் முதுகை
அந்த இடத்தில் அழுத்தியபடி நின்றான். அவன் உடல் கொஞ்சம் கொஞ்சமாக நீலம் பாய்ந்தது கட்டைப் போல் ஆனது. ஆனாலும் மனதின் திடச்சக்தியினால் அந்த இடத்தை
விட்டு நகரவில்லை. கடவுள் அருளால மழையின் வேகம் குறைந்தது. இலேசாக தூற்றல் போட்டது.
குருவும் மற்ற மாணவர்களும் அருணியைப் பார்க்கத் தேடி வந்தனர். அருணி மயங்கிக்கிடந்தான். குரு அவனைத் தன் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு ஆஸ்ரமம் போனார். மூலிகை வைத்தியம் செய்தார். கண் விழித்துப் பார்த்தான் அருணி அவன் கேட்ட முதல் வாக்கியம் "அணை என்னவாயிற்று ?". ஒரே கூட்டம் ஒரே புகழ் மாலை. தான் அந்த ஊரையே காப்பாற்றிய அருணிக்கு ஒரு பெரிய பாராட்டே நடந்தது. குருவும் மனதார அவனை ஆசீர்வதித்து பாராட்டினார்.
வாழ்த்துக்கள்
அன்புடன் அம்மம்மா

















