தாயென்று கும்பிடடி பாப்பா
- ரக்ஷா பந்தன் பண்டிகை
இணையப் பாட்டி
எங்கு மேடைப் பேச்சு இருந்தாலும், சிறு கூட்டமாக இருந்தாலும், "என் அன்பு சகோதர சகோதரிகளே" என்று அழைக்கிறோம். "India is my country. We are all brothers and sisters" என்று பள்ளி அசெம்பிளியில் சத்தியப் பிரமாணம் எடுக்கிறோம். ஆக, சகோதர அன்பு என்பது அளவெடுக்க முடியாத ஒன்று. அப்படிப்பட்ட அன்பை மேலும் வெளிப்படுத்தும் நாளாக வருகிறது ராக்கி பண்டிகை. வட நாடு முழுவதும் கொண்டாடும் இந்தப் பண்டிகை மிகவும் அர்த்தம் உள்ள பண்டிகை. நான் பல வருடங்களாக அங்கேயே இருந்ததால் நானும் இதைக் கொண்டாடுகிறேன். என் பாசமுள்ள சகோதரர் எல்லோருக்கும் மானசீகமாக ரக்ஷை கட்டுகிறேன்.
அன்னையின் அருள் பரிபூர்ணமாகக் கிடைக்க என் வாழ்த்துக்கள்.
இந்த ராக்கி என்றால் என்ன? புராணக் கதை என்ன? பார்க்கலாம்.
இது ஒரு அன்பு பந்தம். சகோதரன் சகோதரியைப் பாசத்தால் கட்டிப் போடும் ஒரு அன்பு பாலம். இது சிராவண பூர்ணிமாவில் வருகிறது. இதற்கு வயதோ ஜாதி பேதமோ கிடையாது. சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய சுபீட்சத்திற்கு பிரார்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறைய பரிசுகள் கிடைக்கின்றன. முன் காலத்தில் ராஜபுத் வம்சத்தில் போருக்குக் போகும் முன் இரத்த திலகமிட்டு, கையில் ரக்ஷையும் க்ட்டி, "வெற்றியுடன் திரும்பி வா" என்று வழி அனுப்பி வைப்பார்கள். இவர்களில் சிலர் முஸ்லிம் பெண்ணையும் சகோதரியாக எற்றது உண்டு. மஹாபாரதக் காலத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர் துருதிராஷ்டருக்கு வரப் போகும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள ரக்ஷை கட்டிக்க சொல்கிறார்.
புராணங்கள் எப்படி இருந்தாலும் எல்லோரையும் சகோதர சகோதரியாக்ப் பார்க்கும் நல்லெண்ணம் வந்துவிட்டால் AIDS என்ற பெயரே இருக்காதே. இல்லையா?
வாழ்த்துக்கள்
விசாலம்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||

















