Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  என்னைப்பற்றி

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.


Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
பேயும் பேயும்
இணையப் பாட்டி



அன்பு குழந்தைகளே,

ஓரங்க நாடகம் (இது ஒரு ஹாஸ்யத்திற்கு மட்டும் தான்)

இடம்: புளிய மரத்தடியில் ஒரு மேடை, நேரம்: இரவு 12 மணி

பாத்திரங்கள்: இரண்டு பிசாசுகள், ஒரு மனிதன் சைகிளில்

காட்சி:

ஒரு பிசாசு {இளைஞன்]: "எத்தனை நாள் இங்குத் தனியாக இருக்கிறேன். சுதந்திர தினமும் வருகிறது, பேச யாராவது வருகிறார்களா? என்னுடன் பேச யராவது வருகிறீர்களா?

வேகமாகச் காற்று அடித்துச் சுழல ஒரு வயதான பேய வருகிறது வெள்ளை நிறத்தில்.

வயதான பேய்: "என்ன! முனிசாமி, என்ன யோசனை? என்னைத் தெரிகிறதா?"

இளைஞன் பேய்: "நீங்கள் யாரு எந்தத் தொகுதியைச் சேர்ந்தவர்? என்ன ஜாதி ?"

வயதான பேய்: "ஏம்பா, இத்தனை வருடமாகியும் இந்த ஜாதி மதத்தை விடவில்லையா? சரி, நானா? நான் வந்து.. சுதந்திரப்போரில் ஈடுபட்டு, பின் சுதந்திரத்தைப் பார்த்துக் களித்தவன்"

இளைஞன் பேய்: "பின் எப்படிப் பேயானீர்கள்?"

வயதான பேய்: இந்தியா பாகிஸ்தான் போரில் என்னைத் தகாத முறையில் சுட்டுவிட்டனர். அதுதான் இப்படி, ஆமாம் நீ ஏன் இப்படி?"

இளைஞன் பேய்: நானா? அது வந்து.. தேர்தல் சமயத்தில் ஒருவனைக் கொலை செய்ய எனக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது. அது செய்வதற்குள் என்னை மாட்டவிட்டு என்னையே கொலை செய்துவிட்டான் ஒரு பாவி".

வயதான பேய்: "அச்சச்சோ, மிக வருந்துகிறேன், இப்படிக் கூட ஒரு தேர்தல் நம் நாட்டிலா நடக்கிறது?"

இளைஞன் பேய்: ஆமாம், இப்போ எல்லாம் அந்தக் காலத் தேர்தல் போல் நடப்பதில்லை"

வயதான பேய்: "சரி, இந்தக் காலத் தேர்தலுக்கு என்ன தகுதி வேண்டும்?"

இளைஞன் பேய்: ஹாஹ்ஹா, தகுதியா? தகுதியே வேண்டாம்"

வயதான பேய்: அது என்ன அப்படிச் சொல்கிறாய்?"

இளைஞன் பேய்: தேர்தலுக்கு பணக்காரனும் நிற்கலாம், ஏழைகளும் நிற்கலாம், சிறந்த அறிவாளியும் நிற்கலாம், முட்டாளும் நிற்கலாம். கைநாட்டு வைக்கத் தெரிந்தாலே போதும். சன்னியாசியும் நிற்கலாம், குடும்பஸ்தர்களும் நிற்கலாம், யார் நின்றாலும் மக்கள் தன் சுயபுத்தியை உபயோகித்து ஓட்டுப் போடும் வழக்கமில்லை."

வயதான பேய்: அப்படியா? வேடிக்கையாக இருக்கே, வேறு என்ன தெரிந்திருக்க வேண்டும்?"

இளைஞன் பேய்: அப்படிக் கேளும் பெரியவரே, நன்கு பேசத் தெரிந்திருக்க வேண்டும். கூச்சல் போடத்தெரிந்திருக்க வேண்டும். "என் இரத்தத்தின் இரத்தமே", "என் உயிரினும் மேலான உடன்பிறப்பே" என்பன போன்ற அறைகூவலுடன் மேடைப் பேச்சை ஆரம்பிக்க வேண்டும். லஞ்சம் வாங்கத் தெரிந்திருக்க வேண்டும், கோடி கோடியாகச் சேர்க்கத் தெரிந்து கொள்ள வேண்டும்."

வயதான பேய்: அப்பப்பா, இத்தனை முன்னேறி விட்டதா நம் நாடு?"

இளைஞன் பேய்: "இருங்கள், இன்னும் சொல்கிறேன். பதவிக்கு வந்து விட்டால் சில வாக்கியங்கள் சொல்லத் தெரிய வேண்டும்."

வயதான பேய்: அப்படியா, அது என்ன?"

இளைஞன் பேய்: "1. பொறுமை காப்போம், பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. 2. கட்சித் தலைவர்கள் முடிவெடுத்தவுடன் எல்லாம் தெரிய வரும். 3 எங்கள் கட்சிக்கு உயிரையே கொடுப்போம் 4. அது பற்றி ஆராய ஒரு கமிஷன் நியமித்திருக்கிறோம், அது முடிவு செய்யும். இந்த சில வாக்கியங்களைப் பேசத் தெரிந்தால் எந்த இக்கட்டிலிருந்தும் தப்பி விடலாம்"

வயதான பேய்: "சரி, தேர்தலில் செயிப்பது எப்படி? அத விளக்கமாகச் சொல்லு"

இளைஞன் பேய்: "அதுவா? ரொம்ப ரொம்ப எளிது. ஓட்டுப் போடுபவர்களுக்கு ஒரு காப்பிப்பொடி பேக்கட் இலவசம் என்று தெருத்தெருவாய் கூறினால் போதும். இலவசம் என்பது ஒரு மந்திரச் சொல், அதில் மயங்காதவரும் உண்டோ?"

வயதான பேய்: அப்படியும் மயங்கவில்லை என்றல்?"

இளைஞன் பேய்: அதுக்குதான் நோட்டு இருக்கே, மெள்ள சில நோட்டுக் கத்தைகளை அவன் கண்ணில் காட்டினாலே போதும். பெட்டிப்பாம்பாக மாறி விடுவான். காரியமும் நடந்து விடும்"

அப்போது இரவு படம் பார்த்த மகிழ்ச்சியில் ஒருவன் சைக்களில் பாடிய படியே வருகிறான், "காதல் பிசாசே, காதல் பிசாசே"

வயதான பேய்: "இது என்ன? நம் பேர் வைத்துக்கூட பாடல்கள் வந்திருக்கின்றன?"

இளைஞன் பேய்: "ஆமாம் இது ஹிட் சாங், நம் பேரை வைத்து செய்யும் சினிமாவும் சரி, பாடலும் சரி ஹிட்டு தான். சந்தரமுகி பாடலும் ஹீட், பாடட்டுமா? {பாடத் தொடங்குகிறது, வாராய், நீ வாராய்...")

வயதான பேய்: "போதும் போதும் எனக்கு நாழி ஆகிவிட்டது. அந்தக்கால படேல், லாலாலஜபதிராய், லோகமான்யதிலக், திரு வ.உ. சிதம்பரனார் போன்ற தலைவர்கள் இந்தக் காலத்தில் கிடைக்குமா? எனக்கு வேண்டாம்பா இந்த இடம்"

இளைஞன் பேய்: எங்கு போவீர்கள்? எல்லா இடத்திலேயும் இதே பாட்டுத்தான். என்னிடமே இருந்து விடுங்கள் பேச்சுத் துணையாக"

வயதான பேய்: இல்லேப்பா ஜம்மூ காஷ்மீரில் சண்டையாம், அதையும் பார்த்துவிட்டு வருகிறேன்"

பேய் உள்ளே மறைய திரை விழுகிறது.

அன்புடன் அம்மம்மா

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants