Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  என்னைப்பற்றி

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.


Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
புலி வரும்
இணையப் பாட்டி



அன்பு குழந்தைகளே,

செப்டம்பர் 13 உலக நல்ல எண்ணங்கள் நினைக்கும் நாள், உலக முழுவதும் கோடிக்கோடி மக்கள் நல்லதையே நினைக்க அதன் சக்தியை அளவிட முடியாது. நீங்களும் நல்ல எண்ணங்களால் இதயத்தை நிரப்புங்கள், உங்கள் படித்த புத்தகங்களை ஏழைகளுக்குக் கொடுங்கள், அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுங்கள். பெற்றோருக்கு உதவ எண்ணுங்கள். பெரியவர்களிடம் மரியாதையுடன் பழக எண்ணுங்கள். குரு பகதியுடன் கல்வி கற்றுக்கொள்ளுங்கள். இந்த எண்ணங்களுக்கு எத்தனை வலிவு என்பதை நீங்கள் இடையன் புலிக் கதையில் பார்த்திருப்பீர்கள்.

ஒரு ஆட்டு இடையன் தினமும் ஆடுகளை மேய்க்க மலை அடிவாரம் போவான். அவன் ஒரு நாள் எல்லோரையும் பயமுறுத்த, "புலி வரது புலி வரது " என்று கத்தினான். அங்கு இருந்தவர்கள் எல்லோரும் பரபரப்புடன் ஓடினர். பின் இரண்டு நாடகள் கழித்து இதே போல், "புலி வரது புலி வரது" என்று கத்தினான். திரும்பவும் எல்லோரும் பயத்தில் ஓடினர், ஆனால் அங்கு புலி வராததுக் கண்டு அவனைத் திட்டிவிட்டனர். மறுநாள் அந்தப்பக்கம் ஒருவரும் வரவில்லை. இடையன் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த போது உண்மையாகவே புலி வந்து விட்டது. இப்போது அவன், "புலி வரது புலி வரது காப்பாற்றுங்கள்" என்று கத்தினான், ஆனால் அவன் இப்ப்டித்தான் வேடிக்கை செய்து ஏமாற்றுவான் என்று நினைத்து ஒருவரும் உதவிக்கு வரவில்லை. புலி அவன் மேல் பாய்ந்து விட்டது.

இந்தக் கதையில் இடையன் செய்த் தவறுகள் ஒன்று, எல்லோரையும் ஏமாற்ற எண்ணம் கொண்டது, இரண்டு, பொய் சொன்னது, மூன்றாவது எல்லோருக்கும் மனதிலே அனாவசியமாகத் துன்பம் கொடுத்தது.

இதைத் தவிர அவன் மனதில் புலி வரும் என்ற எண்ணம் பதிவாகி, அதுவே முடிவில் உண்மையும் ஆகிவிட்டது. இதுவே அந்த இடையன், "தேவதை வருகிறாள், நமக்கு ஆசிகள் வழ்ங்குகிறாள் என்ற நல்லெண்ணம் பதிந்திருந்தால் நிச்சயம் நல்ல காரியம் நடந்திருக்கும். இதே போல் தான் நாமஸ்மரணை மனதில் நாம் கடவுள் நாமங்களை விடாமல் சொல்வோமேயானால் அவர் நிச்சியம் நம் முன் வருவார், முழு நம்பிக்கை முக்கியம், கல் நந்தி கூட நல்ல எண்ணங்களால் நடக்கும் என்ற நம்பிக்கையினால் புல்லைத் தின்றது. அபிராமிபட்டரைக் காப்பாற்ற அந்த அபிராமியே தன் காதில் இருந்த தடாகத்தை வானத்தில் வீசி முழு நிலவாக்கினாள்.

நாம் நல்லதையே நினைப்போம். இதுதான் முக்குணங்களில் சிற்ந்த சாத்விக குணம். அன்புடன் எல்லோரையும் அரவணைப்போம். நல்ல எண்ணங்கள் இருக்கும் இடத்தில் கோபம் இருக்காது. கோபம் இருந்தால்தான் சொல்லக் கூடாத சொற்கள் ம்னதிலிருந்து கிளம்பும். அதுவே சாந்தமாக இருந்தால் எல்லோரிடத்திலும் கடவுளைக் காணலாம்.

அன்புடன் அம்மம்மா

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants