மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

கண்ணே கலைமானே

இணையப் பாட்டி

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management

கடவுளின் படைப்பு

அன்பு குழந்தைகளே,

நம் பெரியவர்கள் நமக்கு எப்போதும் நன்மைக்காகவே சில அறிவுரைகள் வழங்குவார்கள் அதுவும் தாய் என்றால் கேட்கவே வேண்டாம், எப்போதும் குழந்தைகளின் நலத்தையே சிந்திப்பாள். இது பற்றி ஒரு கலைமானின் கதை சொல்கிறேன்.

ஒரு காட்டில் ஒரு கலைமானின் குடும்பம் வசித்து வந்தது. அதன் குட்டிகளும் இருந்தன. அந்த அம்மா கலைமான் தன் குட்டிகளிடம் ஒரு நாள் சொல்லியது, "குழந்தைகளே, நீங்கள் தனியாக ஒரு இடமும் செல்லக் கூடாது. புலி, சிங்கம் போன்ற மிருகம் பாய்ந்து உங்களைக் கொன்று விடும். ஆகையால் எப்போதும் சேர்ந்தே இருங்கள்" எல்லாக் குட்டிகளும் தலையைச் சம்மதத்துடன் ஆட்டியது. ஒரு நாள் ஒரு குட்டி வெளியே போய் பார்க்க ஆவல் கொண்டு தன் இருப்பிடத்தை விட்டு ஆனந்தமாய் சுற்றியது. இதைக் கூர்மையாக இரு கொடூரமான் பளபளக்கும் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன. ஆம், அது புலியினுடையது தான். சமயம் பார்த்து அது மேல் பாய கழுத்தைக் கவ்வி இழுத்துக்கொண்டு போய்விட்டது. முடிந்து விட்டது அதன் கதை.

தாய் கலை மான் தன் குட்டி வராமல் இருந்ததைப் பார்த்து வருத்தம் கொண்டது. ஆனால் அது என்ன செய்ய முடியும்? ஒரு வாரம் சென்றது. இப்போது இன்னொரு மான் கலைமான் குட்டி தானும் கொஞ்சம் தூரம் ஒடிப் பார்க்கலாம் என்று நினைத்து வீட்டை வீட்டு வெகு தூரம் வந்து விட்டது தன் இஷ்டப்படி திரிந்தது பின் ஆய்ந்து ஓய்ந்து களைத்தது ,ஏதாவது ஏரி கண்ணில் தென் படுகிறதா என்று தேடியது. சிறிது நேரம் அலைந்த பின் ஒரு ஏரி பார்த்தது. அங்கு வேகமாக்ப் போய் குனிந்து நீரைப் பார்த்தது நல்ல பளிங்கு போல் இருந்த தண்ணீரில் அதன் முகம் தெரிந்தது, "ஆஹா என்ன அழகு முகம் என்க்கு, என் கொம்பு அதை விட அழகுதான்" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டது. பின் அதன் கால்களையும் அது நீரில் கண்டது, "சீ சீ என்ன அசிங்கம் .. குச்சி போல் கால்கள், என்ன கடவுள், இப்படி இந்தக் கால்களைப் படைத்திருக்கிறார்? அழகாக்வே இல்லையே என்று கடவுளை நிந்தித்தது. உடனே தடதடவென்ற சத்தம் கேட்க, பல வேடர்கள் ஓடி வருவதையும் பார்த்தது. எடுத்ததே ஒரு ஓட்டம். அதற்கு உதவியது அதன் கால்கள், எந்தக் கால்களை அது குச்சிபோல் என்று இகழந்ததோ அந்தக் கால்களால் வேகமாக ஓடி அவர்களிடமிருந்து வெகு தூரம் வந்து விட்டது, நல்ல வேளை, பிழைத்தோம் என்று எண்ணி இருக்கும் தருவாயில், அதன் கொம்புகள் ஒரு புதரில் மாட்டிக் கொண்டது, எத்தனைத் தடவை முயன்றும் வெளியே எடுக்க முடியவில்லை, " நான் அழகு என்று நினைத்த கொம்புகள்: என்னை மாட்டிவிட்டனவே, அசிங்கம் என்று எண்ணிய காலகள் என்னைத் தப்ப வைத்தும் கொம்பால் நான் மாட்டி கொண்டேனே, கடவுளின் படைப்பைப் பார்த்து இகழ்ந்தேனே என்று நினைக்கும் தருவாயில் வேடர்கள் வந்து அம்பு எய்தி அதைக் கொன்று விட்டனர். தாய்ப் பேச்சைக் கேட்க வேண்டும், கடவுளின் படைப்பை இகழக் கூடாது.

கடவுளின் படைப்பு எல்லாம் ஒரு அர்த்தத்தோடு தான் இருக்கிறது. சில சமயம், "சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது போல் "நாம் எண்ணாதது நம்க்கு உதவி புரிகிறது, நாம் மிகவும் நம்புவது காலைவாரி விடுகிறது. நாம் அழகு என்று நின்னக்கும் பொருள் ந்ம்மை ஏமாற்றி விடுகிறது. அழகில்லாத பொருளால் நன்மையும் கிடைக்கிறது ஆகையால் எல்லோரிடமும் நாம் அன்பு காட்ட வேண்டும், வெறுப்பு என்ற சொல்லுக்கு இடம் தரக்கூடாது. எல்லோரையும் நேசியுங்கள். தவறு செய்வது சகஜம், ஆனால் கூடவே மன்னிப்புக் கேளுங்கள், தவறு இழைத்தவர்களையும் மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

The story of a deer, Image courtesy: Wikipedia
The story of a deer, Artwork by mazalais kid

கிண்டல் சுண்டு

அழகு என்றாலே ஆபத்து தானோ?
நல்ல வேளை நான் பிழைச்சேன்!
இப்போது இது பற்றி ஒரு கவிதை,

அழகில் மயங்கிய கலைமான்

கலைமான் ஒன்று காட்டில் திரிய,
எடுத்தது அதற்குப் படு தாகம்,
அங்கும் இங்கும் தண்ணீர் தேட,
கிடைக்காமல் அடைந்தது சோகம்,
முயற்சி விடாமல் கண்டதோர் ஏரி,
வேகமாய் அடைந்தது மனதும் தேறி,
கண்ணாடி போல் தெளிவான நீரில்
கண்டதன் பிம்பம் எண்ணிய போதில்
"ஆஹா என்ன அழகு என் கொம்பு!
கிளை கிளையாய் அழகழகாய்,
ஒ! என் காலென்ன? இத்தனை ஒல்லி
என்ன கடவுள் அவர், இப்படி ஒரு சிருஷ்டி?"

இது என்ன? திடுக்கென்ற ஓர் சத்தம்
வந்தது வேட்டையர்களின் கூட்டம்
கேட்டது சங்கின் முழக்கம்
அது அவர்களின் பழக்கம்,
ஓடியது கலைமான் உயிரைக் காக்க
அதன் காலகள் அதற்கு உதவ
தலைதெறிக்க அத்தனை வேகம்
தப்பி வந்ததும் ஒரே பதட்டம்,
உதவின வெறுத்திட்ட கால்கள் மரந்தனில்
மாட்டிக் கொண்டன அழகிய கொம்புகள்
வேடர்கள் வந்தனர்
அம்பும் எய்தனர்,
அசிங்கம் என நினைத்த கால்கள்
தப்ப வைத்தன
அழகு என்று நினைத்த கொம்புகள்
சிக்க வைத்தன...

அன்புடன் அம்மம்மா விசாலம்

YOUR FEEDBACK FOR THIS STORY WITH POEM
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


editor@mazhalaigal.com