Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children               Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
ஞானத்துளிகள்
சுரேஷ்


Tamil note on family - image courtesy: Freesurveysonline.com

1) குடும்பம்

வயதான பாட்டிக்கு இறுதியாக ஓர் ஆசை! அன்பு போதகர் அவரே தன் இறுதிச் சடங்கை செய்ய வேண்டும். பாசமாய சமாதானம் சொல்லி அன்புடன் போதகர் ஒப்புக்கொண்டார். இரகசியமாய் பாட்டியம்மா போதகரிடம் ஓர் கவரைக் கொடுத்து, தனது இறுதிப் படுக்கையில் அதை வைத்துவிட வேண்டினார்கள். பாட்டி இறந்த செய்தி போதகருக்கு ஏனோ வரவில்லை. பல நாள் கழித்துப் பாட்டியின் இறப்புச் செய்தியை போதகர் அறிந்ததும் கண்கலங்கினார். சில மாதங்கள் கழித்து அன்று பாட்டி தந்த கவரைப் பிரித்துப் பார்த்தார். அதில் அந்தப் பாட்டியின் குடும்ப அங்கத்தினர் அத்தனை பேரும் சேர்ந்து புன்னகைக்கும் குடும்பப் புகைப்படம் இருந்தது!

2) மூன்று கேள்விகள் ???

வேதபாடங்கள், தியானம் - இவை முடிந்ததும் இறுதிப் படுக்கையில் திடமாய்க் கொஞ்சம் படுக்கச்சொல்லி, படுக்கையை மூடி, மூன்று கேள்விகள் வினைவச் சொன்னார் குருவானவர்.

இறந்தால் எத்தனைபேர் வந்து உனக்காக அழுவர்?
வந்தவர் உனைப்பற்றி என்ன சாட்சி சொல்வர்?
உந்தன் தலமை குருவானவர் என்ன சாட்சி சொல்வார்?

கல்லறையிலிருந்து வரவில்லை கருவறையிலிருந்து வந்ததுள்ளேன் என்ற உணர்வில் உண்மை சொன்னான் மாணவர்களில் ஒருவன்:
"இனிமேல் தான் நான் வாழ வேண்டும்!"

3) சொர்கம்

கோடிகள் சம்பாதிக்கும் அறிவாளியே, கோடிகளுக்கு அறிவுரை கூறும் உபதேசகனே, உண்மை சொல்... உன் தாயின் கண்களை தயவாய் பார்த்து, "தாயே உன்னை நேசிக்கிறேன்" என்று சொன்ன நாளென்று ஒன்றுண்டோ? அது என்றென்று சொல்லத்தான் நினைவுண்டோ? சரி.. இன்றாவது சொல்லி மகிழ், பூமியில் சொர்கம் காண்பாய்!

4) குப்பைகள்

குப்பைகள் அசிங்கம் தான். மிருகங்களுக்கும் ருசியற்றவைதான்.
நாற்றம், அழுக்கு, இவை கொடுமை தான்! அந்தக் குப்பைகளில் அழகான செடிகளும், அதில் பூக்கும் பூக்களும் ஒளிந்திருப்பதை யாரரிவார்?

கவலைகளும் குப்பைகள் தான்!

5) ஈஸ்டர் இனிப்பு

பலி ஆடு போல் பள்ளியிலிருந்து பயந்து வந்தான் டேவிட். அவனைப் பதற்றமாய்த் திட்டிமுடித்தாள் அம்மா. சிந்திக்காமலே வார்த்தைக் கற்களைச் சிதறியெறிந்தனர் சொந்த பந்தங்கள். கோபக்காரத் தந்தையின் பங்கை எதிர்பார்த்து, கேள்விக்குறியில் அவனுடலும் பாவம் தளர்ந்தது; தேர்வில் பார்த்து எழுதியதாய்ப் பொய்க் குற்றச்சாற்று. அவனின் தேகமும் மனமும் உடைத்ததந்தக் குற்றச்சாற்று!

தந்தை வந்ததும் எல்லோரும் ஒற்றைக்குரலில் முறையீடு. தந்தையின் கோபத்தை நினைத்து பயந்த அவனோடு உண்மை கேட்டு முன்வந்தோர் யாருண்டு!
என் பிள்ளை நீ தவறேதும் செய்ய மாட்டாயப்பா ... என்று சமாதானம் செய்தார் அவனின் அன்பு அப்பா.

இனிதான் இனிதாய் ஈஸ்டெரென்று இனிப்பை உண்ணச் சென்றான் இனியவன் டேவிட்!

           


Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button