Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all

  என்னைப் பற்றி

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்




Tamil-English bilingual webmagazine
Bring out the child in you...               Best Viewed in 1024x768 Resolution

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to use Tamil in computers with Azhagi - the Easiest and Fastest Tamil Transliteration Software.  

Mazhalaigal.com is a Website Dedicated to Education of Children

Easiest and Best

மழலைகள்






Bookmark this page
மோனத்தில் விளைந்த உணர்வலைகள்
அ.நி. V. நாகேஸ்வரன்





             

கடல், பிரம்ம, அலை, அறிவு, ஜீவன்

ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது! அது ஒன்றினில் ஒன்றாக உருவானது! ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது! மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் உயர்வேது!- கண்ணதாசன். இதையே மகரிஷி அவரது உணர்வில் கவிவடிவாக, ஆதியென்ற பிரம்மமது கடல் போல் ஒன்று! அதிலெழுந்த ஜீவனெல்லாம் அலைபோல் ஆச்சு! பேதமுடன் அலைகள் அவை விரிந்த போதும்! பிரியாது கடலை விட்டுக் கடல் ஒன்றேனும்! என்று உணர்த்துகிறார். கடலுக்கு அலை; அலைக்குள் கடல். கடல்தான் அலையின் பிறப்பிடமும் இருப்பிடமும் ஆகும். கடலுக்குள் இருந்த அலை கடலுக்குள்ளேயே இருக்கும். பஞ்ச பூதங்களின் அழுத்தத்தினாலும், கடலையே அப்பூதங்கள் மென்மேலும் சூழ்ந்தழுத்துவதாழும், அக்கடலின் திணிவே அலையாக வெளி வந்து இயக்கப் பொருளாக மாறுகிறது; இதுவே சக்தி. பஞ்ச பூதங்களான விண், காற்று, நெருப்பு, நீர், நிலம் இவைகளில் விண்தான் முதல் தன்மாற்றம் அடைந்த உயிராற்றல். அது மேலும் சூழ்ந்தழுத்தத்தினால் நிலம் வரை சென்று, நிரந்தரமாகி விட்டது. இந்த விண்ணின் தற்சுழற்சி வேகமானது தன்னுள் இருக்கும் இறைத்துகளான காந்தத்தை வெளித்தள்ள, அக்காந்தம் மீண்டும் கடலாகிய பிரம்மத்தில் கரைந்து கடல் முழுவதையும் காந்தமாக்கி விட்டது. இக்காந்தமே அலையாக, உயிராக, ஜீவனாக வேளிப்படுகிறது. இதனை அகத்தவத்தினால் நன்கு உணரலாம்.

இதனால்தான் பிரம்மாகிய கடலை "சிவம்" என்றும், அதில் இருந்து வெளி வந்த அலையாகிய ஜீவனை, உயிரை சக்தியாகவும் உணர்கிரோம். இவ்வாறாக, சிவனுக்குள் சக்தியும், சக்திக்குள் சிவனும் பின்னிப் பினணந்து ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவாகி உருவாகி விடுகிறது. எனவேதான், சக்தியையும், சிவனையும் உறவிலே உயர்ந்த முறையான, இறைநீதியுடன் திகழும் உறவான கணவன் - மனைவியாக இனணத்தார்கள். இந்த ஒரு உறவில்தான் காந்தத் தன்மையைப் பரிபூரணமாக உணர முடியும். இத்தகைய உறவால்தான் மற்றோர் சிவனையோ, சக்தியையோ உருவாக்க முடியும். இதனை உணர விந்தாற்றலை சிவன் சொத்தாக நினைத்துப் போற்ற வேண்டும். இதைத்தான் " சிவன் சொத்தாகிய விந்தாற்றலை அளவு முறை மீறி செலவழித்தாலோ அல்லது செலவாக்காமல் இருந்தாலோ தனது குலம், வம்ச விருத்தி நாசமாகி விடும் என்பதால்" சிவ சொத்து குல நாசம்" என்றார்கள் நம் முன்னோர்கள்.

சிவனது உயிராற்றலில் பாதி சக்தியின் உயிராற்றலாக நாதமாகப் போற்றப்படுகிறது. விந்து என்பது ஒளி; நாதம் என்பது ஒலி. விந்தைக் கட்டி இருப்பாக வைத்து சமாதி அடையும்போது, அவ்வுடம்பு, ஒளி உடம்பாகிறது. அளியும் ஒலியும் செர்ந்தால் அதுவே "மின்சாரம்" ஆகும். சக்தியும் சிவனும் ஒன்றானதால் ஜீவனுள்ள ஒவ்வோர் உயிர் உடலிலும் மின்சாரம் பாய்கிறது. இதுவே "உணர்ச்சி" எனப்படுகிறது. இம்மின்சாரத்தில் தடுமாற்றமோ, தடமாற்றமோ இருந்தால், உயிரைத் தாங்கும் சக்தியான விந்தாற்றல் பாதிக்கப்பட்டு, இருப்பு குறைந்து, விந்தைத் தாங்கும் குண்டம் உடைந்து மீதமிருக்கும் விந்துவும் கொட்டிவிட, மரணம் நிகழ்கிறது.

அதே, பிரம்மமாகிய மெய்ப் பொருளே, ஜீவனில் கெட்டிப் பொருளாக உடலாகவும், பெளதீகப் பொருளாக காற்று, வெப்பம், நீராகவும் அமைந்துள்ளது. இவ்வனைத்தும் அடங்கிய ஜீவனில், உயிர் என்ற விண் சுழல்வதால் காந்தமாகிய மின்சாரம் உண்டாகிறது. இதுவே ஜீவகாந்தம் - அலை. இவ்வலையை முறையாக இயக்க பஞ்சேந்திரியங்கள் பயன்படுகின்றன. இதனை இயக்குவது ஜீவகாந்தமாகிய மனம் என்ற ஒரு புதினப் பொருள். இவ்வாறு உண்டான ஜீவகாந்தம், தனக்கென்று ஓர் மையத்தை ஏற்படுத்திக் கொண்டு சுழல்கிறது; இதுவே "கருமையம்". கருமையத்தில் உள்ள ஜீவகாந்தத் திணிவு இறைத்தன்மையுடையது. அதனைத் தாங்கும் விந்து நாதமும் இறைநிலையே, பிரம்மமே. பஞ்ச பூதங்களின் தன்மாத்திரைகளை அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணத்தை உயிர் உணர இறைநிலையே மனமாகவும் அமைந்து விட்டது. இயற்கையே இறைநிலை; இயற்கையே எண்ணமாகவும் உள்ளது. எனவே விண்ணே உயிராக, உயிரே படர்க்கை நிலையில் மனமாக, அம்மனமே இயற்கையான எண்ணங்களாய் சுழல்கிறது.

கடல் எவ்வாறு அலைகளற்று, நிலையாக, தெளினாக, அமைதியாக இருந்தால், அதனுள் இருக்கும் விலைமதிப்பற்ற இயற்கை வளங்களை துல்லியமாக, புறக்கண்ணால் காண இயலுமோ, அவ்வாறு பிரம்மமாகிய அறிவை - நிலையாக, அசைவற்றதாக, மன அலைகளற்று, அமைதியாக வைத்திருந்தால், இயற்கையின் ரகசியமான "பூரணத்தை" அகக்கண்ணால் துல்லியமாக உணர முடியும். இதற்குத் தேவை "அகத்தவம்" ஒன்றே!

மழலைகள் ஆசிரியர் குழு




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants