Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  என்னைப் பற்றி

Meet our Authors

RoboForm: Learn more...

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்



 

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
புராண விஷயங்கள்
பார்வமணி




1. த்ரௌபதியின் ஐந்து புதல்வர்கள் யார் யார்?

ப்ரதிவிந்த்யன்; ஸுதஸோமன்; ஸ்ருதகர்மா; ஸ்தனீகன்; ஸ்ருதஸேனன்

இவர்கள் ஐவரும் முறையே யுதிஷ்டிரர், பீமசேனன், அர்ஜுனன், நகுலன், ஸஹதேவன் இவர்களுக்கு த்ரௌபதியிடம் பிறந்தவர்கள் (ஆதி பர்வம் 220/79,80). இரவில் தூங்கும்பொழுது இவர்களை அஸ்வத்தாமா கொன்றுவிட்டான் (ஸௌத்திக பர்வம் 8).

2. பகவானுடைய “ஹ்ருஷீகேசன்” என்ற பெயருக்கு என்ன பொருள்? அவருக்கு “பாஞ்சஜன்யம்” என்ற சங்கு எங்கிருந்து கிடைத்தது?

“ஹ்ருஷீகம்” என்றால் புலங்கள், அவற்றை ஆள்பவன் “ஹ்ருஷீகேசன்”. மேலும் மகிழ்ச்சி, சுகம், சுகமயமான் ஐஸ்வர்யங்கள் இவற்றிற்கு இருப்பிடமானவரையும் “ஹ்ருஷீகேசன்” என்று சொல்வாகள். பகவான் புலன்களை ஆள்பவனாகவும் இருக்கிறார்; மகிழ்ச்சி, சுகம், பரமைச்வர்யத்தின் கருவூலமாகவும் உள்ளார். ஆகவே அவர் “ஹ்ருஷீகேசன்” என்று பெயர் பெறுகிறார்.

“பஞ்சஜனன்” என்ற் பெயருடன் சங்கு உருவத்தில் இருந்த ஒரு தைத்யனைக் கொன்று பகவான் அவனை சங்கு உருவத்தில் தம்மிடம் சேர்த்துக்கொண்டார். அதபனால் அந்த சங்குக்கு “பாஞ்சஜன்யம்” என்ற பெயர் வந்தது ( ஹரிவம்சம் 2/33/17).

3. அர்ஜுனனுக்கு “தனஞ்சயன்” என்று எப்படிப் பெயர் வந்தது? அவ்ர் “தேவதத்தம்” என்ற் ச்ங்கை எங்கிருந்து பெற்றார்?

ராஜஸுய யாகம் நடந்தபோது அர்ஜுனன் பல அரசர்களை ஜெயித்து அளவற்ற செல்வத்தைக் கொண்டுவந்தார், அதனால் அவருக்கு “தனஞ்சயன்” என்ற பெயர் வந்தது. அவர் நிவாதகவசர் முதலிய தைத்யர்கள்டன் போரிட்டபோது இந்திரன் “தேவதத்தம்” என்ற ச்ங்கை அர்ஜுனனுக்கு அளித்தார் (வன் பர்வம் 174/5).

4. பீமசேன்னுக்கு ”பீமகர்ம” என்றும் “வ்ருகோதரன்” என்றும் எப்படி பெயர் வந்தது? அவருடைய “பௌண்ற்றம்” என்ற சங்கு “மஹாஸ்ங்கம்” என்று ஏன் கூறப்பட்டது?

பீமசேனன் மிகுந்த பலவான். அவருடைய செயல்கள் பார்ப்பவர், கேட்பவர்களுடைய மனதில் பயத்தை உண்டாக்கின. அதனால் அவர் பீமகர்மா என்று பெயர் பெற்றார். அவர் அதிகமாக உணவு உண்பவர். அத்தனையும் ஜீரணிக்கும் சக்தியும் அவருக்கு இருந்தது. அதனால் அவருக்கு “வ்ருகோதரன்” (ஓநாயின் வயிற்றைப் போன்ற வயிற்றை உடையவன்) என்ற பெயரும் ஏற்பட்டது அவருடைய சங்கு மிகப்பெரியது. அதனோசையும் அதிகம். ஆகவே அது மஹாஸ்ங்கம் என்று கூறப்பட்டுள்ளது.

5. குடாகேசன் என்று அர்ஜுனன் ஏன் அழைக்கப்பட்டார்?

“குடாகா” தூக்கம், துக்கத்தை ஜெயித்தவன். ‘குடாகேஸன்”. தூக்கத்தை ஜெயித்தவன் அர்ஜுனன்.

6. க்ருபண என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன?

இந்த சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உண்டு.

(1). போதுமான செல்வ வசதி படைத்த ஒருவன் செல்வத்தில் மிகுந்த பற்றுக் கொண்டு பேராசையுடன் தானமளிக்கும் போதும், தானே சுகபோகங்களை அனுபவிக்கும்போதும், நியாயமாக செலவழிக்க மனமில்லாமல் ஒரு காசு கூடச் செலவழிப்பதில்லையோ, அந்தக் கருமியை க்ருபணன் என்பார்கள்.

(2). மனித வாழ்க்கையில் சாஸ்த்ர ஸம்மதமான நல்லோர், பெரியோர்கள ஏற்றுக்கொண்ட முக்யமான லக்ஷ்யம் பகவனுடைய தத்வம் அறிந்து, அவரை அடைய முயற்சி செய்வது’ என்பது. இந்த லக்ஷ்யத்தை மறந்து உலக சுகபோகங்களில் தன் வாழ்வை வீண்டிக்கும் அறிவிலியை க்ருபணன் என்று சொல்வதுண்டு.

(3) ப்ரஹதாரண்ய உபனிஷத் கூறுகிறது, இந்த அழிவற்ற பரமாத்மாவை அறிந்துகொள்ளாமல் இவ்வுலகிலிருந்து இறந்து மறைபவன் க்ருபணன்.

(4) போகத்திலும், அதற்கு வேண்டிய செல்வத்திலும், அதன் பயனிலும் ஈடுபாடு உள்ளவர்களை “க்ருபணன்” என்று பகவானும் கூறுகிறார்.

(5) ஸாதாரணமாக இரங்கத்தக்க நிலையில் உள்ளவரையும் ”க்ருபணன்” என்று கூறுவது உண்டு.

7. “கோவிந்த” என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

கோ3பி4ர்வேத3வாக்யைர்வித்3யதே லப்4தே இதி கோ3விந்த3 வ (வேத வாக்கியங்களால் அடையப்படுபவன் கோவிந்தமன்). இதன் படி வேத வாக்கியங்களால் பகவானுடைய ஸ்வரூபத்தை அறிய முடிகிறது. அதற்கு அதனால் கோவிந்தன் என்று பெயர். கீதையில் கூட க்ருஷ்ணர் சொல்கிறார், "எல்ல வேதங்களாலும் அறியப்படுபவன் நானே - வேதை3ஸ்ச ஸ்ர்வைரஹமேவ வேத்3ய: (15/15).

பார்வமணி

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button