என்னைப்பற்றி
 Meet our Authors Tweet

கவிதைக் குயில் ராகினியின் நேசகானம் LIVE

PayOffers.in

  DONATE EYES

Favorites Achalam.com
AKR Consultants
Young Poet.org
RCC pipes.com
Brahmin Today.org
Healthcareall.org
Kalakad.org
CIT76.com
Thamizhisai.com
Peopleofindia.net
Astrotimers.com
EducationalService.net
Airomatic Systems
Nilacharal.com
Societal Support
Tamilunltd.com


உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Children Sites
Picture Puzzles



வெளியே

தமிழ் அநிதம்
Positive Anthony
Mazalais Blog
Tamil Software
தமிழ்த்தேனீ
மீராம்பிகை
கீதா சாம்பசிவம்
காலனை வென்றவன்
அன்புடன் அருணா
நிலாச்சாரல்
They Link Us
Learn Tamil
Tamil University
Cultural India
தமிழிதழ்கள்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com
Sify.com
Digital Flash Clock

For the people

Kiran Bedi
Anna Hazare
I Paid a Bribe
Citizen Journalist
Fight Corruption
Vote for India
CAG of India
India Vision
Public Cause
Fight Corruption




Tamil-English bilingual webmagazine Dedicated to Education of Children - best viewed in 1280x800 Screen Resolution
To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.        Bring out the child in you...






மழலைகள்

social mazhalaigal.com CoolSocial.net Snippet


 Facebook Twitter More...



Easiest and Best

Back Issues

FIGHT CORRUPTION


NOTICE
BUY TAMIL BOOKS ONLINE

RSS feed generator

Back Issues

Send a Greeting



சின்னக் கண்ணன்
Little Krishna

குறள் தோட்டம்

தமிழ் இலக்கியக் களஞ்சியம்

Make Home



BLOG SITES

BLOGGER
Blog.co.in
தமிழ்மணம்
தமிழ்.கணிமை
மாற்று
தமிழ்வெளி
WORD PRESS
Blog.com
Open.Salon
Wikipedia
விக்கிபீடியா
சிந்தாநதி
nisaptham

TAMIL BLOGS

ஆங்கிலம் பயில
Arif Maricar
நிலா முற்றம்
tamilblogging
பேசும் தமிழ்
Yahoo Groups blog
தமிழ்க் கொங்கு
மு.இளங்கோவன்
சுரேஷின் உணர்வுகள்

ENGLISH BLOGS

Trichy Express


Websites

Saibaba
Yoga University
Yoga Sudha
Scientific Heritage
SLOKA KIDS
INFITT
Quicklex
asiafinest
Darulsafa.com
Tamil Actors
Painting Styles
Oil Paintings
Renowned Painters
தமிழிலக்கியம்
சுரதா.காம்
தினமலர்
தினகரன்
தமிழோவியம்
நூலகம்
அமுதம் தமிழ்
அதிகாலை
நிலாரசிகன்
தமிழ் இந்து

Forumn

muthamilmantram
tamilnadutalk
My Tamil.net
AIF
வரலாறு.காம்
bharathamonline

Healthcare

acneassasin.com/

Search Engines

Guruji
Yanthram
tamil-swicki
sitemap-urls
picsearch
touche
Search Engines

Web Services

Stat Counter
Payment gateway
Website informer
Website informer button

Government Sites

TN CM Special Cell

Infotainment

SMS Tropps
All Tamil Magazines
SMS Jokes

Travel Guide

Journey Mart

Indian Cities

Namma Chennai

For the youth


Educational Sites

Learning Sanskrit
Arsha Vidya Center
Sanskrit from home
Sanskrit Classics

Tamil Literature, Poems etc.

ரிஷ்வன் கவிதைத் துளிகள்
panchamirtham

Groups

இல்லம் (HOME)
People of India
முத்தமிழ்
மின்தமிழ்
orungkuRi

பாரத தேவியின் திருத்தசாங்கம்
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
இலக்கிய வேல்
- கவியோகி வேதம்

Cloud Solution for WordPress | Cloudaccess.net   Cloud Solution for Joomla! | Cloudaccess.net







ஆசிரியர்/அலுவலக முகவரி: சந்தர் சுப்பிரமணியன், தொலைபேசி: 94440 81696, 33 வாட்டர்ஃபோர்ட் அடுக்ககம், 72/1, கிழக்குக் கடற்கரைச் சாலை, திருவான்மியூர், சென்னை 600 041. chandarsubramanian@gmail.com
சந்தா விவரம்: தனியிதழ் ரூ 10 ஆண்டு சந்தா ரூ 100 வாழ்நாள் உறுப்பினர் ரூ 1000

விடுதலை வேள்வியில் தொட்டதும் சுட்டதும்

தேசபக்தக் கலைஞர்கள்

மதுரை வீதியில் அம்மன் தேர் ஆடி அசைந்து முன்னேறிக் கொண்டிருந்தது. "சீனிவாசவரதன் கோஷ்டி வந்தாச்சாப்பா?" என்று கேட்டார் கோயில் அறங்காவலர்களில் ஒருவர். "அவங்க வந்து பாடலன்னா ஜனங்கத் தேரை ஓட விட மாட்டார்ங்களே! அதோ பாருங்க கூட்டத்தை. அங்கேதான் பாடிக்கிட்டுப் போறாங்க. சீனிவாசவரதன் பஜனைக் கோஷ்டி தேசபக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு ஊர்வலத்தின் முன்னே சென்றது. அது சுவாமி பாடல்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. தேச பக்தர்களுக்குத் தேசம்தான் தெய்வம். எனவே அங்கே தேச பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. முதலிலே சுவாமிப் பாடல்கள் பாடுவதாகத் தோன்றும்.

வேத வாணியும் பாரத தேவி
வீர துர்க்கையும் பாரததேவி
மாதவர் கனல் பாரததேவி
மங்கலத் திரு பாரத தேவி
வீரர் வீரமும் பாரத தேவி
விஜயலட்சுமி பாரத தேவி
பாரின் அன்னையும் பாரத தேவி
பாது காவலும் பாரத தேவி

- (கவியோகி சுத்தானந்த பாரதியார்)

கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறும்.

"தேசம் சுதந்திரம் பெறலாகாதா எங்கள் இந்தியா
ஜெகமதில் எங்கணும் இழிவே பெருகவும்
சேமம் ஒழிந்திட நின்றோம் தேசம்
ஏகாதிபத்தியம் வந்து புகுந்து
ஏறி மிதித்திட நொந்தோம்
சோகம் தவிர்க்க நாமினி ஒன்று
சூழ்ந்து துணிய லாகாதா?

காங்கிரஸ் கொடியின் கீழ்நின்றே ஆங்
காரமுடன் போர் செய்வோம்
ஓங்குக புரட்சி, ஏகாதிபத்தியம்
ஒழிக, நம்கொடி வாழ்க!

- (ப.ஜீவானந்தம்)

கூட்டத்திலிருந்து ஒரு குரலெழும் "பாரதியார் பாட்டுப் பாடுங்கப்பா"

"வந்தேமாதரம் என்போம் - எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்" அதைத் தொடர்ந்து ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, வீர சுதந்திரம் எனப்பல பாடல்கள் பாடப்படும்.

"மதுரகவி பாஸ்கரதாஸ் பாட்டுப் பாடுங்க" என்று இன்னொருவர் குரல் கொடுப்பார்.

இராட்டினமே காந்திக் கை பாணம் நாளும்
நம்மைக் காக்கும் பிரமாணம் - சுதேசிய
நாட்டிற்கதர் வேலைச்சூட்டி நற்கங்கணம்
நன்றாய்க் கட்டுவோம் தினம் - நாகரிக (ராட்டினமே)

வீட்டிற்கு வீடிது மெய்யாக வேண்டுமே
மீட்சி பெறத் தூண்டுமே பாஸ்கரன்
ஆட்சித் தமிழ் தோன்றுமே - மிக முழங்கிடும் ராட்டினமே

இப்படியாகப் பாடிக்கொண்டே செல்வார்கள். இப்பாடல்களைக் கேட்டு மக்கள் பணம் கொடுப்பார்கள். அது தேசியத்தொண்டு செய்யப் பயன்படுத்தப்படும்.

சுவாமி ஊர்வலம் மட்டுமல்ல. கல்யாண ஊர்வலத்திலும் தேசபக்திப் பாடல்கள் பாடப்படும். மணமகள் கதர் அணிந்தால்தான் கல்யாணம் என்று சொல்லப்பட்ட தெல்லாம் உண்டு. அங்கே ஒரு தேச பக்தர் பாடுவார்

கற்புடை மாதர்களின் மேலே - விழக்
கண்டோமே அன்யநாட்டுச் சேலை
விற்பனை குறையும் அதனாலே - அவர்
விளங்கிக் கதர் உடுத்தல் மேலே.

ஆரியகான கே. ஏஸ். அனந்தநாராயண ஐயர், சங்கு சுப்பிரமணியம் ஆகிய பாடகர்ள் தேசபக்திப் பாடல்களைப் பாடிக் கேட்க வேண்டும். அன்பர் சங்கு சுப்பிரமணியம், பாரதியாரின் பாடல்களைத் தனித்திறமையோடு பாடி, கேட்போரை ஆவேசங்கொள்ளச் செய்வார். பாரதியாரின் "ஊழிக்கூத்து"ப் பாடலை அவர் ஒருமுறை பாடிக்கேட்டோர் தம் வாழ்நாள் முழுவதும் அதனை மறக்க மாட்டார்கள். தேசபக்தர் ஒருவர் இறந்துபோனால், அவரது பிரேத ஊர்வலத்தின் பின்னேயும் தேசிய பஜனைக்குழு செல்வதுண்டு.

தமிழகமெங்கணும் சென்று, ஊரூராகச் சுற்றியலைந்து தேசியப் பாடல்களைப் பாடி, நாட்டில் தேசபக்தியை வளர்த்த தேசிய பஜனைக் கோஷ்டிகளும் உண்டு. தியாகி சுப்பிரமணிய சிவா. "தேசபக்த சமாஜம்" என்ற பெயரில் தொண்டர் படை ஒன்றை அமைத்திருந்தார். இந்தப் படையினர் தமிழ்நாடெங்கும் தொடர்ந்து ஏழுமாத காலம் சுற்றுலா செய்து, பாரதியாரின் தேசியப் பாடல்களைப் பரப்பினர். 'கல்கி' டி. சதாசிவம், மதுரை சிதம்பர பாரதி, சோழவந்தான் ரா. சீனிவாசவரதன், தியாகராச சிவம், நெல்லை ந. சோமயாசுலு ஆகியோர் தேசபக்த சமாஜப் படையைச் சேர்ந்தவர்களில் சிலர்.

கம்பனி காலத்திலேயே நாட்டுப்புறப் பாடல்கள் பல வெள்ளைக்காரன் கொட்டத்தைச் சுட்டிக் காட்டியுள்ளன. இதோ ஒரு நாட்டுப்புறப்பாடல்

ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருவன் போட்டானாம் வெள்ளரிக்காய்
காசுக்கு ரெண்டு விக்கச்சொல்லிக்
கட்டளை போட்டானாம் வெள்ளைக்காரன்
வெள்ளைக்காரன் மணம் சின்னப்பணம் - அது
வேடிக்கை செய்ததாம் வெள்ளிப்பணம்
வெள்ளிப்பணத்துக்கு ஆசைப்பட்டு - நீ
வேஷங்குலைந்தாயே வீராயி
எட்டிப் பாக்குறான் வெள்ளைக்காரன் அவன்
ஏய்ச்சுப் பிடுங்குற கொள்ளைக்காரன்
கட்டி முடிஞ்சுக்கோ சுருக்குப்பையை - அவன்
கண்டான் பிடுங்குவான் கிறுக்குப்பய
கல்லை வெட்டச் சொன்னான் வெள்ளைக்காரன்
கல்லாப் போவான் வெள்ளைக்காரன்
மண்ணை வெட்டச் சொன்னான் வெள்ளைக்காரன்
மண்ணாப் போவான் வெள்ளைக்காரன்.

தங்களது நாட்டு மன்னனிடம் வந்து கப்பம் கப்பம் என்று பணம் பிடுங்கும் வெள்ளைக்காரனின் வஞ்சகத்தைக் கச்சிதமாய்ச் சொல்லுகிறது இந்த நாட்டுப்புறப் பாடல். இப்படி நாட்டுப்புறப் பாடலிலிருந்து பிறகு மக்கள் விரும்பிப் பார்க்கும் நாடகங்களுக்குத் தாவியது மக்களுடைய ஆவேசம். இதில் முக்கியமானவர்கள் சதாவதானம் தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர், டி.கே. சண்முகம், மதுரகவி பாஸ்கரதாஸ், எஸ்.எஸ். விஸ்வநாததாஸ், நடராஜபிள்ளை, கே. சாரங்கபாணி, எம்.எம். சிதம்பரநாதன், கே.என். அனந்தநாராயணன் டி.பி. பொன்னுச்சாமிப்பிள்ளை, எஸ்.வி. சுப்பையா பாகவதர், டி.எம். காதர் பக்ஷா, திருவாரூர் ஏ. இராமசாமி, சுவாமிநாத சர்மா, எம்.ஆர். கமலவேணி, கே.பி. ஜானகி அம்மாள் இன்னும் பலர்.

பாவலர் கிருஷ்ணசாமி பாகவதர் நடத்திய நாடகங்கள் கதரின் வெற்றி, பம்பாய் மெயில், கவர்னஸ் கப், பஞ்சாப் கேசரி, கமலசேகரன். தேசியக் கொடி.

மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு மீண்டும் வந்து சுதந்திரப் போராட்டத்துக்குத் தலமைப் பொறுப்பேற்று நடத்தத் தொடங்கிய அந்தக் கால கட்டத்திலேயே தமிழ் நாடகம் தேசிய நீரோட்டத்தில் கலந்திருந்தது. காந்திஜி எல்லோரும் கதர் உடுத்த வேண்டும் என்று சொன்னபோது கதரை மக்களுக்குக் கொண்டு செல்ல அதிகம் உதவியது நாடகமேடை. மதுரகவி பாஸ்கரதாஸ், உடுமலை நாராயண கவி ஆகியோர் எழுத அவற்றை நாடகங்களில் பாடியவர்கள் விஸ்வநாத தாஸ், கேபி ஜானகியம்மாள் கமலவேணி போன்றவர்கள். பாரதிதாசன் கதர்ப் பாடல்கள் பாடியிருக்கிறார்.

கூட்டமுதம் நானுனக்கு ராட்டினப் பெண்ணே- அடி
கொஞ்சுங்கிளி நீ எனக்கு ராட்டினப் பெண்ணே!
பாட்டினிக்கப் பாடுகின்ற ராட்டினப் பெண்ணே- பண்டு
பாரதத்திலே பிறந்த ராட்டினப் பெண்ணே!
ஊட்டமுறத் தோளுயரும் உடலழகும் - எனக்
கூக்கமும் கொடுத்துவரும் ராட்டினப்பெண்ணே!
காட்டுமலர்த் தேனுருசி வண்டறிதல்போல் - நாம்
கைகலந்த பின்பு சுகம் கண்டு மகிழ்ந்தேன்.

வேல்சாமிக் கவிராயர் என்பவர் எழுதிய கதர்க்கப்பல் கொடி என்ற பாடல் அந்த நாளில் மிகப் பிரசித்தம்.

கதர்க் கப்பல் கொடி தோணுதே - கரம்
சந்திர மோகனதாஸ் காந்தி இந்தியா சுதேசக் - கதர்க்

அதற்கப்பால் ஞானாகாசம்
அதிலே பாரத வாசம்
இதற்குள் சிவப்ரகாசம்
இனி நமக்கு சந்தோஷம் - கதர்க்

மானிடச் சிப்பிக்குள்ளே மகாத்மா ஒரு முத்துப்போலே
ஞானவடிவம் வந்ததாலே - கதர்க்

எஸ் எஸ் விஸ்வநாததாஸ் தனது வீட்டையும் இழந்து நாடகம் போட்டார். மயில் மீது அமரும் முருகனாக அவர் அமர்ந்து "பஞ்சாப் படுகொலை" என்று பாடுவார். அவர் கடைசியாக நடித்து வள்ளி திருமணம் நாடகம். ஏலத்துக்குப் போகும் தன் வீட்டை நாடகவசூல் மூலம் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் சென்னை ராயல் தியேட்டரில் 1941ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ந் தேதி இரவு ஸ்ரீவள்ளி திருமணம் நாடகத்தில் முருகனாக நடிக்க மேடையேறினார். நல்ல கூட்டம். முதல் காட்சியே கழுகாசலக் காட்சி. விஸ்வநாத் தாஸ் முருகன் வேடத்தில் மயில் மீது ஏறி அமர்ந்தார். உச்சச் சுதியில் "மாய உலகம் இம்மண் மீதே" என்று பாடினார். மேற்கொண்டு பாடல் இயலவில்லை. தலை தொங்கிவிட்டது. அமரராகி விட்டார். வாழ்நாளெல்லாம் என்ன தொழிலைத் தேசத்தொண்டுக்காக ஆற்றிவந்தாரோ அந்தத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே உயிர் துறந்தார்.

கலை மூலம் தேசசேவை செய்தோர் ஏராளம்.









Post your comments to Facebook


to mazhalaigal@gmail.com    Give your Feedback     Take a Quiz

Submit your content by mail to: mazhalaigal@gmail.com     Free Software Every Day     Free world Clock
Designed and maintained by AKR Consultants