தாயென்று கும்பிடடி பாப்பா
- அழகியை அறிந்தவர்கள்
AKR
ஆயிரம் ரூபாய் அதிசயம் - அழகி
தாயுமானவன்
அழகி மென்பொருள் தற்பொழுது முற்றிலும் இலவசம்
Azhagi Software is 100% Free
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது நம் தமிழர்களின் இடைவிடாத முழக்கம், ஆனால் இது சாத்தியமா என்னும் வினாவினை எழுப்புகையில் விடையாக கிடைப்பது கேள்விக்குறிதான். பத்திரிக்கைகளின் பெயர்களில் தமிழ் இல்லை. பைந்தமிழில் அந்நிய மொழிக் கலப்பின்றி மேடையில் உரையாடும் நற்றமிழ்ப் பேச்சாளர்கள் அருகி வருகிறார்கள். தொலைக்காட்சியில் தமிழ் இல்லை. அதைத் திமிங்கலமாக்கி, தமிங்கிலிஷாக்கி காசு பார்த்துக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.
வளரும் தலைமுறைகளை உருவாக்கும் தவச்சாலைகளான பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை. ஆங்கிலம் பேசுவதே மனித நாகரிகத்தின் அடையாளம் என்கிற பார்வையில் தமிழ் மொழியின் முக்கியத்துவம் காயடிக்கப்பட்டு வருகிறது. நான்கு மனிதர்கள் சந்தித்து தங்களின் தேவைகள் நோக்கி உரையாடிக்கொள்ளும் சூழலில்கூட அவர்தம் நாவில் அந்நியமொழிக் கலப்பை உபயோகித்து என்ன செய்கிறோம் என அறியாமலே தாய்மொழிக் கற்பழிப்பை நிகழ்த்தும் அவலம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. குழியில் விழுந்து சிறைப்பட்ட யானையின் நிலையில் பிளிறித் தவிக்கிறது நம் செம்மொழி. தாய்மொழியும் தாய்பாலும் ஒன்றேதான் என உணராத தமிழர்கள் ஒரு பொய்யான வாழ்வியலை நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றால் மிகையில்லை.
பில்கேட்ஸ் இந்த நூற்றாண்டின் இணையற்ற மனிதன். கணினியின் தொடர் வளர்ச்சிக்கு இடையறாமல் உழைத்துக்கொண்டிருக்கும் உலக வியாபாரி. ஒட்டுமொத்த உலகப் பயன்பாட்டுக்காய் உருவாக்கிய கணினியில் உலக மொழிகளில் கணினியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் நேர்ந்துவருகிறது. அவ்வகையில் கணினியில் தமிழின் பயன்பாடு குறித்து ஆய்வுகளும் செய்யப்படாமல் இல்லை. தட்டச்சுப் பயிலகங்களில் ஆங்கில மொழிக்கு இருக்கும் ஆர்வமும் கூட்டமும் அதைச் சார்ந்த பணி வாய்ப்புகளும் தமிழ்த் தட்டச்சுப் பயிற்சிக்கான முட்டுக்கட்டையாய் இருந்துவருகின்றன. கணினிப் பயன்பாட்டாளர்கள் கூட அநேகம் பேர் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் என அறுதியிட்டுக் கூற முடியாது. அவர்கள் அனுப்பும் இணையச் செய்திகள் (email), உணர்வின் வெளிப்பாட்டை அப்படியே காட்ட இயலாமல் சட்டமிடப்பட்ட படம் போல ஆங்கிலத்தில் செயற்கையாக உள்ளக்கிடக்கைகளைப் பகிர்ந்து வருகிறார்கள். நவீன கணினி வாய்ப்புகள் ஒவ்வொரு தனி மனிதனையும் படைப்பாளிகளாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
BLOGS, CHATTING, MS OFFICE UTILITIES என ஒவ்வொரு தளத்திலும் மொழியின் பயன்பாடு தீவிரப்பட்டிருக்கிறது. தொழில்முறை சாராத எழுத்தாளர்களை காலம் உருவாக்கும் கடடாயம் நிகழ்ந்திருக்கிறது. ஒரு தனி மனிதன் தனக்கு மட்டுமே நிகழ்ந்த ஒரு அனுபவத்தை ஒட்டுமொத்த உலகோடு பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இனி விடை இல்லாக் கேள்விகள் இல்லை என்னும் சூழலை நோக்கி கணினித் தொழில் நுட்பம் சென்றுகொண்டிருக்கும் வேகத்தில் நம் உணர்வுகளை நாம் நினைத்தவாறே நம் தாய்மொழி தமிழில் வெளிப்படுத்த முடியாதா? இந்த எண்ணம் எல்லோர் மனதிலும் எழும். ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்குத் தாய்மொழித் தமிழில் இணையச் செய்தி பரிமாற முடியாதா? BLOGகளீல் தம் சுய அனுபவங்களைக் கவிதையாக, கட்டுரையாக, கதையாக நம் தாய்மொழித் தமிழில் எழுத முடியாதா?
இத்தனை கேளிவிகளுக்கும் ஒரே விடை "அழகி".
ஆம், உண்மையிலேயே அவள் அழகிதான். தோற்றத்தில், உள்ளடக்கத்தில், நேர்த்தியில், நாளைய தேவைக்கு இன்றே உழைத்துக்கொண்டிருக்கும் அக்கறையில் அவள் உண்மையிலேயே அழகிதான். "அழகி" UNICODE எனும் தொழில் நுட்பத்தில் நம் கணினியை முழுமையாகடத் தாய் மொழி தமிழுக்கு மாற்றித்தரும் உன்னத மென்பொருள். அழகியை சீதனமாய் என் கணினிக்குள் கொண்டுவந்த பிறகு ஆயிரம் யானைகளின் சக்தி கிடைத்திருக்கிறது எனக்கு.
நான் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்கிறேன். அழகி அதை அட்சர சுத்தமாய் செம்மொழித் தமிழில் காட்டுகிறது. அமெரிக்காவில் இருக்கும் என் தோழமையோடு என்னால் தமிழில் CHAT செய்ய முடிகிறது. என் அலுவல் கடிதங்கள் அத்தனையும் என் உள்மனம் நினைக்கும் உண்மையான உணர்வோடு தமிழில் உருவாக்க உதவியாய் இருக்கிறாள் அழகி.
EXEL, POWERPOINT, PHOTOSHOP, BLOGS, CHAT, இன்னும் நானாவிதத் தட்டச்சுத் தேவைகளுக்கும் சற்றும் சளைக்காமல் தன் பங்களிப்பைச் செய்கிறாள் அழகி. நான் ஒரு திரைப்பட இயக்குனர். இப்போது என்னால் வெகு வேகமாக எனக்குத் தேவையான திரைக்கதையை அழகியின் உதவியோடு சர்வ சாதாரணமாக உருவாக்க முடிகிறது. நான் தமிழன். இப்போது என் கணினியும் தமிழ்க் கணினி.
உங்களுக்கும் அழகி மிகச் சுலபமாகக் கிடைப்பாள். இணையத்தில் azhagi.com எனும் தளத்தில் அழகியை இலவச வடிவில் பதிவிறக்கம் செய்து நீங்கள் பயன் பெற முடியும். இலவச வடிவைவிட ரூபாய் ஆயிரம் செலுத்தி azhaki proffessional மென்பொருளை உரிமையோடு வாங்கிப் பயன்படுத்திப் பாருங்கள். நீங்களும் இன்னும் ஆயிரம் பேருக்கு அழகியை அறிமுகப்படுத்துவீர்கள். 9840339750 என்கிற தொலைபேசியில் அழகியை அழையுங்கள். அவள் உங்கள் கணினிக்குள் வலது காலை எடுத்துவைத்து வரட்டும். அப்போதுதான் உலகம் நம் உள்ளங்கையில் என்பது உண்மையாகவே புரியும்.
நான் அழகிக்கான வியாபார முகவர் அல்ல. அழகியின் பயன்பாட்டால் நிறைவுபெற்று யான் பெற்றதை இவ்வுலகும் பெற நினைக்கும் ஒரு சாமானியன். அழகி கணினியின் தமிழ் தேவைக்கான முன்னோடி.
ஆம், ஆயிரம் ரூபாய் அதிசயம்.
தாயுமானவன்
அழகியை அறிந்தேன்
பாகம் பிரியாள்.
தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் நீறு பூத்த நெருப்பாக இருந்தது. ஆனால் அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று தெரியவில்லை. அப்பொழுது பயன்பாட்டில் இருந்த வந்த மென்பொருளைப் பயன்படுத்தி வந்தாலும் ஸ்ரீ, ஞா போன்ற வார்த்தைகளை தட்டச்சு செய்வது சிரமமாய் இருந்தது. 2007-ல் நண்பர் ஒருவர் அழகியை அறிமுகப் படுத்தினார். அழகியின் சிறப்பு அம்சம் அதன் எளிமை. கணினியின் பயன்பாடு முழுமையாகத் தெரியாதவர்களும் அவர்கள் சொல்லியுள்ள விதிமுறைகளைக் கடைபிடித்தால், அழகி நம் கணினியை அழகாக்குவாள். அழகியை நான் பயன்படுத்திக் கொண்டிருந்த போது அதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் கணினியை பார்மட்டிங்க் செய்த பின் அழகிக்கான ஆக்டிவேஷன் கோர்டை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இப்பொழுதோ இன்னும் எளிமை! அழகி 6.0.2 என்பதை பயன்படுத்தினால் அந்த ஆக்டிவேஷன் கோர்டும் தேவையில்லை.
காந்தி போட்ட நோட்டுக்காக உலகமே ஆலாகப் பறந்து கொண்டிருக்கையில் கணினி மற்றும் கன்னித் தமிழின் மேல் உள்ள காதலால் அழகியை இலவசமாகத் தந்து கொண்டிருக்கும் திரு விஸ்வநாதன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பரராட்டைக் கவிதையாய் ஆக்கி விட்டேன்.
அழகியைப் பற்றி மலர்ந்த கவிதை இதோ!
அகரத்தில் ஆரம்பித்த அவள் பயணம் இன்று
சிகரத்தை நோக்கி வீறு நடையாய் விருதுகளோடு!
மொழியைத் தாயாகக் கொள்ளும் மரபை அடியொற்றி
மென்பொருளுக்கு அழகியே அழகிய பெயரானது!
தமிழ் கூறிடும் நல்லுலகிற்கு மற்றொரு மைல்கல்லாய்
தனிச் சிறப்பாய் அருமை அழகி அவள் திகழ்கிறாள்!
பிறந்த இடம் சிங்காரச் சென்னை என்றாலும்
புகுந்த இடமோ தமிழ் இதயமெனும் பெரிய இடம்!
தமிழ் வளர்த்த சங்கரனுக்கு மூன்றாம் கண்.
தமிழ் வளர்க்கும் அழகிக்கும் சின்னம் கண்!
விரலசைப்பில் வேண்டியது பெற விரும்பியது தர
வழி வகை செய்து தரும் அட்சய பாத்திரம் அவள்!
மூன்றெழுத்துதான் என்று நினைக்க வேண்டாம்
மோதுபவரை வீழ்த்தவும் அவளிடம் ஆயுத எழுத்து உண்டு!
கட்டுரை, மின்னஞ்சல், கவிதை எது வேண்டும் என்றாலும்
கருத்துக்களைக் கோர்க்கக் கை கொடுப்பாள் அவள்!
எங்கிருந்தாலும் தீந்தமிழ் என்னும் மாலையில்
அனைவரையும் இணைக்கும் அழகுக் கண்ணி (கன்னி)அவள்!
அழகியாய்ப் பிறந்து, "மழலை"யாய் வளர்ந்து "இல்லம்" புகுந்த
அவள் நம் உள்ளத்திலும் அமர்ந்து விட்டாள் அழகாய்!
பாகம் பிரியாள்.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||

















