மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE

Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

விஞ்ஞான எழுத்தாளர்

akr

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management
Introducing Science articles writer
என் இயற்பெயர் ந.பாலசுப்பிரமணியன், பிறந்தது ஜூலை 18, 1931. தஞ்சாவூர் ஜில்லாவில், கண்டமங்கலம் கிராமம் என் சொந்த ஊர்.

தந்தையார் ரெயில்வேயில் சிவில் பொறியாளராக பணிபுரிந்தார். அவருக்கு அடிக்கடி ஊர் மாற்றல் ஆகுமானதால் நான் பாட்டனார் (தாயாரின் தந்தை) வீட்டிலிருந்துதான் படித்தேன்.

ஹிந்து உயர்நிலை பள்ளி (Hindu High School, Big Street) திருவல்லிக்கேணி, சென்னையில் முதலில் நான்காம் வகுப்பில் சேர்ந்தேன். பிறகு, 1942 Evacuation சமயத்தில் ஒரு வருடம் அய்யம்பேட்டையிலும்,. ஒரு வருடம் திருக்காட்டுபள்ளி, பிறகு அரக்கோணம் C.S.M. உயர்நிலை பள்ளி, அதன் பிறகு சென்னை ஹிந்து உயர் நிலைப் பள்ளிக்கே திரும்பி S.S.L.C. படிப்பை முடித்தேன்.

மதுரையில் உள்ள மதுரை காலேஜில், Intermediate படித்துவிட்டு, பிறகு சென்னையில் L.E.E. (Licenced Electrical Engineer) படித்தேன். பெரம்பூர் ரெயில் பெட்டித் தொழிற்சாலையில் ஒரு வருடம் அப்ரென்டிஸ்ஸாகப் பணியாற்றினேன். அப்பொழுது எனக்குத் திருமணம் ஆனது. அதன் பிறகு அந்த வேலையை விட்டு விட்டு, தமிழ்நாடு மின்வாரியத்தில், மேட்டுர் அணையில், 1954ஆம் வருடம், பணியில் சேர்ந்தேன். நான்கு வருடங்களுக்குப் பிறகு பதவி உயர்வு பெற்று மாறற்லாகி, சிங்காரா மின் உற்பத்தி நிலையத்தில் 10 வருடமும் (அங்கு இருக்கும்போது பிரைவேட்டாக படித்து A.M.I.E. (Elec) பாஸ் செய்தேன்), பரளி மின் உற்பத்தி நிலையத்தில் 4 வருடமும், ஈரோடு சப் ஸ்டேஷனில் 4 வருடமும், எண்ணூர் அனல் மின் உற்பத்தி நிலையத்தில் 7 வருடமும், பிறகு கடைசியாக, மறுபடியும் எந்த இடத்தில் வேலையில் சேர்ந்தேனோ அதே மேட்டூருக்கு வந்து, மேட்டுர் அணை அனல் மின் நிலையத்தில் பணியாற்றி 1989ல் ஓய்வு பெற்றேன்.

Introducing Science articles writer
என் பொழுதுபோக்கு புத்தகம் படிப்பது, இந்தப் பழக்கத்தால், ஜோதிடம், கை ரேகை சாஸ்த்திரம் நியூமராலஜி மற்றும் ஏனைய ஆகுல்ட் சாஸ்த்திர (occult science) புத்தகங்களையும் படித்தேன்.

கணினி வந்த பிறகு ப்ரௌசிங் செய்து, பல விஷயங்களை அறிந்து, நான் அறிந்ததை மற்றவர்களுடன் மின் அஞ்சல் மூலமும், ஏனைய இணையதளக் குழுமங்கள் மூலமும் பகிர்ந்து கொள்வதுதான் இப்பொழுதைய பொழுதுபோக்கு.

இல்லம் (HOME) குழுமம் மூலம் திரு ஆகிரா அவர்கள் அறிமுகம் கிடைத்து. இப்பொழுது அவருடைய மழலைகள்.காம் இணையதளத்திலும் "பார்வமணி" என்ற புனை பெயரில் எழுதிவருகிறேன்.

என் மனைவி இந்திரா பாலசுப்பிரமணியன் ஒரு இல்லத்தரசி.

எனக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். நால்வருக்கும் திருமணமாகி, அவர் அவர் குடும்பத்துடன் சௌக்யமாக இருக்கிறார்கள்.

ந. பாலசுப்ரமணியன்

பார்வமணி அவர்கள்தான் "அழகி" எனும் அரிய மென்பொருளை உருவாக்கிய இளம் விஞ்ஞானி விஷியின் தகப்பனார் என்பதை இதுவரை அறியாதவர்கள் அறிந்து கொள்க.

தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்

எனும் குறள் வலியுறுத்தும் செயலை செவ்வனே செய்த இத்தந்தையும்

மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை
எந்நோற்றான் கொல்லெனும் சொல்

எனும் குறளின் வழி நின்று சாதனையாளராகத் திகழும் அன்பர் விஷியும்

நாம் வாழ்வின் வழிகாட்டிகளாகக் கொள்ளத்தக்கவர்கள்.

ஆகிரா

பார்வமணி அவர்கள் எழுதிய ப்டைப்புகள்:

மழலைகள்.காம் தளத்தில்:

சர் சி.வி. இராமன்

ஆல்ஃப்ரெட் நொபெல்

மேரி க்யூரி அம்மையார்

கணித மேதை ராமானுஜன்

தாமஸ் ஆல்வா எடிசன்

இரவீந்திரநாத் தாகூர்

Nilacharal.com

What is wrong with NORTH ?

பிற படைப்புகளின் சுட்டிகள் இங்கு இணைக்கப்பட உள்ளன

Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com